English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
sculpture
n. செதுக்குகலை, குழை ஓவியக்கலை, சிற்பவேலை, சிற்பவேலைப்பாடுடைய பொருள், சிற்பக்கலைப்டைப்பு, (வில., தாவ.) தோடுகளின் மீது காணப்படும் மேடு பள்ளமான குறியீடுகள், (வினை.) சிற்ப வடிவில் அமை, செதுக்குருஅமை, குழை ஓவியக்கலைஞனாக, சிற்பத் தொழில் செய்.
sculptured
a. செதுக்கப்பட்ட, குழை ஓவியமாக உருவாக்கப்பட்ட, (வில., தாவ.) தோடுகள் மேல் மேடுபள்ளமான அமைப்புடைய.
sculpturesque
a. குழை ஓவியம் போன்ற, சிற்பக்கலைப் படைப்பின் இயல்புடைய, சிலையொத்த, செதுக்குச்சித்திரத்தின் பான்மையுடைய.
scum
n. கலிப்பு நுரை, மாசேடு, கசடு, கழிவு, சவறு, சக்கை, செத்தை, மக்கள்தொகையின் கழிகடை, கழிசடை மக்கள், (வினை.) மேற்பரப்பிலுள்ள கழிவு நுரையை எடு, கலிப்பு ஏட்டினை நீக்கு, மேற்கசடாய் அமை, கலிப்பேடாக உருவாகு, மேல்நுரைப்பு எய்தப்பெறு.
scumble
n. எண்ணெய்ச்சாய ஓவிய வகையில் வண்ணமென்னயப்பாடு, (வினை.) எண்ணெய்ச்சாய ஓவிய வகையில் மென்பூச்சு மழுங்கலாக்கு.
scuncheon
n. மூலைக்குறுக்குவிட்டம், எண்கோணத்தூபியைத் தாங்கும் சதுரக்கோபுர மூலைக் குறுக்குக் கல்விட்டம், மூலைக்குறுக்கு வில் வளைவு, எண்கோணத் தூபியைத் தாங்கும் சதுரக்கோபுர மூலைக் குறுக்கு வில்வளைவு, நில உள்வரி அகலம், கதவு நிலப்பக்கத்திற்கும் சுவரின் உட்புறத்திற்கும் இடையேயுள்ள கட்டுமானம்.
scunner
n. கடுவெறுப்பு, வெறுப்பிற்குரிய பொருள், (வினை.) வெறுப்பூட்டு, குமட்டு, வெறுப்புக்கொள்ளு.
scupper
-1 n. வடிபுழை, கப்பலில் தளத்தின் மேல்நீர்வடியும் பக்கவாட்டுத் துளை.
scurf
n. தோல்பொருக்கு, உதிர்தொலி, கழிதோல், வங்கு, பொடுகு, மேற்புறச்செதிள்.
scurfiness
n. தோற்பொருக்குள்ள தன்மை, பொருக்கார்ந்த இயல்பு.
scurfy
a. தோற் செதிளுள்ள, தோற்பொருக்கு உண்டுபண்ணுகிற, பொருக்கார்ந்த, பொருக்கு உட்கொண்ட, பொருக்குப்போன்ற.
scurril, scurrile, scurrilous
கீழ்த்தரமான, இழிதகவான, மிகளங் கொச்சையான.
scurrility
n. கீழ்த்தர வசை, இழிதகவுப்பேச்சு.
scurry
n. குறுநடை ஓட்டம், விரைந்த குறுகிய காலடிகளால் ஓடுதல், குறுநடை ஓட்ட அரவம், குறுநடை ஓட்டக் குதிரைப் பந்தயம், (வினை.) குறுநடை ஒட்டமிடு, குறுகிய காலடிகளுடன் விரைநடையாக ஓடு.
scurvy
n. ஊட்டக்குறைக் கோளாறு, ஊட்டச் சத்துக்குறைவினால் ஏற்படும் சொறி கரப்பான்-பல் எகிர் வீக்கநோய், (பெ.) மிகக் குறைவான, கீழான, இழிந்த, நேர்மையற்ற, வெறுக்கத்தக்க, கெட்ட.
scurvy-grass
n. ஊட்டக்குறைக் கோளாறு மருந்தாகப் பயன்படும் கடுகு குடும்பச் செடிவகை.
scut
n. குறுவால், முஸ்ல்-மான் முதலியவற்றின் வால்.
scutage
n. (வர.) கேடய வரி, தண்டு மாற்றுவரி, நிலப்பண்ணை முறையில் மேலாளருக்குரிய படையூழியத்திற்கு மாற்றீடான வரி.
scutal, scutate
கவசம் போன்ற, பாதுகாப்புத் தகடுடைய.
scutch
n. சணல்கோது கருவி, சணல் கோதிய முரட்டு நார்ச்சக்கை, (வினை.) சணல் ஈரப்பதநாரை அடித்துக்கோது.