English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
scholium
n. ஓரக்குறிப்பு, விளக்கவுரை, கிரேக்க ரோமத்தொல் பேரிலக்கிய ஏட்டுப்பகுதிகளிற் பண்டை இலக்கண ஆசிரியரது விளக்கக்குறிப்பு.
school
-1 n. பள்ளி, கல்விச்சாலை, கலைக்கூடம், தொழிற் பயிற்சிக்கூடம், பள்ளிக்கட்டிடம், பள்ளிக்கூட அறை, பள்ளிக்கல்வி, பள்ளிக்கல்விப்பருவம், பள்ளிமாணவர்தொகுதி, இடைநிலைக்காலக் கலைவிரிவுரைக் கூடம், பல்கலைக்கழகத்தனித் தேர்வுமுறைப் பயிற்சிப் பிரிவு, பல்கலைக்கழகத் தேர்வுக்கூடம், சீடர் குழாம், சீட பரம்பரை, ஆசிரியமாணவக் கூட்டுக்குழு, தனிமுறைக்குழு, தனிமுறைக்கொள்கைக் குழாய், அறிவர்-கலைஞர் முதலியவர்களைப் பின்பற்றுபவர்கள் தொகுதி, தனிமுறை மரபுக்குழு, தனிநடை முறைப்பாணி பின்பற்றுபவர்கள் குழு, (வினை.) பள்ளிக்கு அனுப்பு, கல்வி அளி, பயிற்சி அளி, ஒழுங்குபடுத்து, கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவா, தனிமுறையில் பழக்கு, பயில்வித்துப் பழக்கப்படுத்து, பின்பற்றத் தூண்டுதல் அளி.
school-board
n. பள்ளி மேற்பார்வைக்குழு.
school-days
n. பள்ளி நாட்கள், பள்ளியிற் கழித்த காலம்.
school-ship
n. பள்ளிப்பயிற்சி நிலை.
school-term
n. பள்ளி வழக்குச்சொல், பள்ளியாட்டைப் பிரிவு.
school-time
n. பள்ளித் தொடக்க நேரம், பள்ளி திறந்திருக்கும் நேரம், பள்ளிப்பருவம்.
schoolable
a. கட்டாயப்பள்ளிப் படிப்பதற்குரிய வயதுடைய, பள்ளியில் படிப்பிக்கத்தக்க, பயிற்றுவிக்கத்தக்க.
schoolfellow
n. பள்ளித் தோழர், பழைய பள்ளித்தோழர்.
schoolfish
n. கூட்டமாகத் திரியும் மீன்வகை.
schoolhouse
n. பள்ளிக் கட்டிடம்.
schoolman
n. இடைநிலைக்கால ஐரோப்பிய பல்கலைகழகக் கணக்காயர், இறைமைவாத பண்டிதர்.
schoolmaster
n. பள்ளித் தலைமையாசிரியர், பள்ளி ஆசிரியர்.
schoolmate
n. பள்ளித்தோழர்.
schoolmiss
n. அனுபவமற்ற இளநங்கை.
schoolmistress
n. பள்ளித் தலைமையாசிரியை, பள்ளி ஆசிரியை.
schoolroom
n. பள்ளிக்கூட அறை, தனி வீடுகளிற் படிப்பதற்கான அறை.
schools
n. pl. பல்கலைக்கழகத் தனிமுறைத் தேர்வுகள்.
schooltide
n. பள்ளி நாட்கள், பள்ளிப்பருவம்.
schooner
n. பல பாய்களுடைய மரக்கலம், உயரமான இன்தேறல் கண்ணாடிக்குப்பி, சாராய அளவைக் கலம்.