English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
scapular
n. சமயத்தலைவர் அணியும் தோளை மறைக்குஞ் சிறு அங்கி அல்லது உடுப்பு, சமயச்சங்கத்தில் நுழைவதற்கு அடையாளமாய் மடத்துத்துறவியரின் குறுந்தோளங்கி, சமயநிறுவன ஏற்புச் சின்னமான தோள்வரைத் தொங்கல் அணி, தோள்கட்டு, (பெ.) தோள்சார்ந்த, தோள்பட்டை சார்ந்த.
scapulo-humeral
a. தோள்பட்டை மேற்கை இணைப்புச் சார்ந்த.
scapulo-radial
a. தோள்பட்டை முன்கை கட்டெலும்பு இணைப்புச் சார்ந்த.
scapuol-ulnar
a. தோள்பட்டை முன்னை உள்ளெலும்பு இணைப்புச் சார்ந்த.
scar
-1 n. வடு, துயரம் முதலியவற்றின் நிலைத்த விளைவு, இலை முதலியன உதிர்ந்தமையால் செடியில் ஏற்பட்ட வடு, விதையின் காம்புவடு, (வினை.) வடுப்படுத்து, தழும்பு உருவாகப் பெறு.
scarab
n. பண்டைய எகிப்திய மரபில் போலி வண்டுருமணி, (பெ.) பண்டைய எகிப்திய மரபில் திருத்தூயவண்டு சார்ந்த.
scaramouch
n. வாயடிவீரன்.
scarce
a. அருமையான, போதாத, பற்றாக்குறையான, (வினையடை.) மிக அருகலாக.
scarcely
adv. மிக அருகலாக.
scarcement
n. சுவர் உளிவிலகீடு, அரண்மதில் உள்வாங்கீடு, கரை உள் ஒதுக்கம், சுவர் உள் விலகீட்டுக்கோணம், அரண்மதில் உள்வளைவு குடுவை, கரை உள்வளைவுப் பள்ளம்.
scarceness
n. அருகல் நிலை, பற்றாக்குறை, தட்டுப்பாடு.
scarcity
n. பற்றாக்குறை, அருமைப்பாடு.
scare
n. கிலி, அடிப்படையற்ற அச்சம், கலக்கம், படையெடுப்புப் பற்றிய பீதி, வாணிகத்துறையில் தேவையற்றகவலை, (வினை.) கிலியூட்டு, தேவையின்றி அச்சுறுத்து, அறிவிலியைப் பிதியுறச்செய், விலங்கைக் கலவரப்படுத்து, குழந்தைக்குப் பூச்சாண்டி காட்டு.
scare-head, scare-heading
n. பரபரப்புச் செய்தித்தாள் தலைப்பு.
scarecrow
n. புல்லுரு, புள்ளோட்டியாக வைக்கப்படுங்கொல்லைப் பொம்மை, பூச்சாண்டி, கந்தலாண்டி, அலங்கோல உடையணிந்தவர், எலும்புந் தோலுமாணவர்.
scaremonger
n. வீண்கிலி பரப்புபவர்.
scarf
-1 n. கழுத்துத்தண்டு, தோள்துண்டு, வல்லாவட்டு, கழுத்துப்பட்டிகை.
scarf-loom
n. அகலமற்ற படிவங்களை நெய்யுந் தறி.