English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
successor
n. பின்வருவோர், மரபில் பின் தொடர்வோர், பின்னமர்வாளர், தொடர்வது.
successor ship
n. பின்மரபுத் தோன்றல்நிலை, பின்னுரிமையாளர் நிலை, மரபுத்தொடர்ச்சி முறைமை, மரபுத்தொடர்ச்சி ஆள் வகையில் மரபுரிமை பற்றிய நிலை.
succictly
adv. செறிவாக, மணிச்சுருக்கமாக.
succictness
n. செறிவு, மணிச்சுருக்கத்தன்மை.
succinct
a. செறிவான, செறிக்கப்பெற்ற, சுருக்கமான, மணிச்சுருக்கமான.
succory
n. நீல மலர்வகை, போலிக்காப்பிப்பொடி வகை, சிக்கரி.
succotash
n. அவரை சோள வேவல் பண்டம்.
succour
n. உற்றுழி யுதவி, காலத்தாற் செய்த உதவி, படையுதவி, உதவிக்கு வரும் படை, (வினை.) உற்றுழியதவு, இடரில் உதவிக்கு வா, இடுக்கணிடையே உதவி வழங்கு.
succuba, succubus
துயின் மோகினி, துயிலும் ஆடவருடன் வன்புணர்ச்சி புரிவதாகக் கருதப்படும் பெண்பேய்.
succulence
n. சாற்றுச்செறிவு, சாறுதசைக் கண்ணிறுக்கத் தன்மை.
succulent
a. சாறுகட்டிய, சாற்றுச்செறிவான, சாறுததும்பலான, சாறுதசைக் கண்ணிறுக்கம் உடைய, (தாவ.) மென்கொழுந் தசையுடைய, கனிவுச் செறிவுடைய.
succursal
n. நிறுவனத்தின் கிளை, (பெ.) திருக்கோயில் வகையில் துணைமையான, கிளைநிலையான.
such
n. அத்தகையது, அவ்வகைப்பட்டது, அது, அத்தகையவை, அவ்வகைப்பட்டவை, அவை, மேற்கூறப்பட்டது, மேற்கூறப்பட்டவை, குறிப்பிடப்பட்டவர், குறிப்பிடப்பட்டவர்கள், அத்தகைய ஒன்று, அம்முறையான ஒன்று, அவ்வகைப்பட்டவை, அவ்வகைப்பட்டவர்கள், என்பது போன்றத, என்பது போன்றவை, என்பது போன்றவர், என்பது போன்றவர்கள், (பெ.) அதே வகையான, அதே அளவான, அவ்வகைப்பட்ட, அப்படிப்பட்ட, அத்தகையா, அவ்வியல்புடைய, அந்த அளவான, அவ்வளவு பெரிதான, இம்மாதிரியான, இதுபோன்ற, கூறப்பட்ட முறையான, குறித்த முறையான, இந்நிலைக்கொத்த, இந்நிலையில் உய்த்துணரத்தக்க, இச்சூழலுக்கேற்ற, மேற்சொல்லப்பட்ட, மேற்சொல்லப்பட்ட வகையான, எவ்வளவோ நல்ல, எத்துணையோ மோசமான, என்று கூறும் அளவான, எவ்வளவோ-அவ்வளவான.
such-and-such
n. இன்னின்னார், (பெ.) இன்னின்ன.
suchlike
n. அம்மாதிரியானவர், அவ்வகைப்பட்டது, அவ்வகைப்பட்டவை, (பெ.) அவ்வகையான, அதுபோன்ற.
suck
n. சப்புதல், உறிஞ்சுதல், பால்குடிப்பு, பால்சுவைப்பு, சப்புக்கொட்டுதல், வாய் உறிஞ்சுசெயல், பால்சுவைப்பு வாய்ப்பு, மார்புச் சப்புப்பால், சிறிதளவு சாராயக் குடிப்பு, சிறிதளவு சாராய வடிப்பு, சாராயக்குடி மடக்களவு, (இழி.) பள்ளிச்சிறுவர் வழக்கில் இனிப்பு, (இழி.) பள்ளிச்சிறுவர் வழக்கில் பெருத்த ஏமாற்றுநிலை, படுதோல்வி, (வினை.) பசப்பு, உறிஞ்சு, மார்பு சப்பு, விலங்கு மடியில் பால்குடி, சப்பிக்குடி, உறிஞ்சிக்குடி, பருகு, உறிஞ்சிக் குடித்துவிடு, நக்கு, நாவினால் துழாவு, உதட்டால் அதுக்கு, அதுக்கி உள்ளிழு, குழாய் வகையில் உறிஞ்சொலி செய், நீர்ச்சுழி வகையில் உள்வாங்கு, ஈர்த்துக்கொள், உள்வாங்கி உலர்வி, உள்ளிழுத்துச் சுவறவிடு, உட்கொள், நலங்கவர், பயனாதாயங்கொள், மனத்தில் வாங்கிக்கொள், அனுபவமற்ற நிலையுடையவராயிரு, குழந்தை நிலையிலிரு, (இழி.) பள்ளிச்சிறுவர் வழக்கில் கெஞ்சிப்பசப்பு, அடிமைத்தனமாகக் கெஞ்சி வசப்படுத்த முயலு.
suck-up
n. அண்டிப் பிழைப்பவர், பல்லைக்காட்டிப் பிழைப்பவர்.
sucker
n. உறிஞ்சுவோர், உறிஞ்சுவது, ப ன்றிக்குட்டி, திமிங்கிலக்கன்று, பால்மாறாக் கன்று, அனுபவமற்றவர், குழந்தை போன்றவர், ஒட்டுயிரி, ஒட்டுறிஞ்சி, அட்டை, உறிஞ்சி வாழ்பவர், சப்பு இனிப்புப்பண்டம், சூப்புமிட்டாய், உறிஞ்சு மீன் வகை, உறிஞ்சலகு மீன் வகை, நீடுமெல்லலகு மீன் வகை, பற்றலகு மீன் வகை, பற்றலகுப் பகுதி, உறிஞ்சுகுழாயின் உந்துதண்டு, உறிஞ்சுகுழாயின் ஊடிணைப்புக்குழல், தை, தூரடித் தாவர இளங்கன்று, இயந்திரப் பற்றுறுப்புப் பகுதி, பற்றுத்தூக்கி, பற்றீர்ப்பு விளைட்டுக்கருவி, தூரடி முளை, தண்டு நில அடித்தளிர் முளை, வேர்த்தளிர் முளை, கிளைத்தளிர்முனை, காம்படிக் கவட்டுத் தளிர் முளை, (வினை.) தூரடிக் கன்றுகள் அகற்று, பக்கமுளைகள் தறி, கிளைமுளைகள் கழி, தைவிட, கிளைமுளைவிடு, பக்கக்கன்று விடு.
sucking
a. உறிஞ்சுகிற, பால் மறக்காத, பால்மனம் மாறாத, பழக்கமற்ற, அரும்புகிற, தொடக்க நிலையில் உள்ள.