English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
strepitoso
adv. இசைக்குறிப்பு வகையில் உரத்த ஆரவாரத்துடன்.
streptococcus
n. சங்கிலி நுண்மம், நுண்மப் பிளப்புக்குப் பின்னும் ஒட்டிக்கொண்டிருக்கும் நுண்மவகை.
streptomycin
n. நுண்மங்களிலிருந்து கிடைக்கும் நுண்ம எதிர்ப்புப்பொருள்.
stress
n. அழுத்தம், இறுக்கவிசை, அழுக்கம், பாரவிசை, நெருக்கடி, சூழ் அடர்ப்பு, தவிர்க்க முடியா அவசர நிலை, வற்புறுத்தீடு, வலியுறுத்தீடு, சொல்லின் அசையூற்றம், அழுத்தவிசை, வாசகத்தின் சொல்லழுத்தம், ஜப்தி, கடனுக்கான கைப்பற்றீடு, (வினை.) வற்புறுத்து, ஊன்றியுரை, வலியுறுத்திக்கூறு, அசையூற்றங்கொட, அசையூற்றக் குறியிட, வாசக வகையில் சொல்லழுத்தங் கொடு, இயந்திர விசையழுத்தம் அளி.
stressed
a. சொல்வகையில் விசையழுத்தமுடைய, அசை வகையில் விசையழுத்தம் பெற்ற, வற்புறுத்திக் கூறப்பட்ட.
stressful
a. அழுத்தவிசையுடைய, அழுத்திக் கூறுகிற.
stressless
a. அழுத்தவிசையற்ற.
stretch
n. நீட்டுதல், நீட்டநிலை, நீட்டம், பற்றியிழுப்பு, வல்லிழுப்பு நிலை, விரிவுப்பாடு, விரிவியல்பு, ஓரம், கோடி, முனை, நெடுவெளி, இடையறவில்லா அகல் பரப்பு, காலநீடெல்லை, தாவெல்லை, ஒருதிசை நீடெல்லை, வீச்சளவு, முயற்சியின் ஒரு விடாமூச்சளவு, விடாத் தொடர் எல்லை, நேர்கட்டம், பந்தயப் பாதையில் திரும்பா நேர்திசைப் பகுதி, உச்ச எல்லை, ஆற்றலின் முழுநிறைவளவு, உயர்வு நவிற்சி மிகைப்பாடு, (இழி.) ஓராண்டுச் சிறைத் தண்டனை, (வினை.) நீட்டு, நீள்வுறுத்து, பரப்பு, விரிவாக்கு, விரியச்செய், நேராக்கு, தொய்வு நீக்கு, நிமிர்த்து, நௌிவெடு, மடிப்பகற்று பற்றி இழு, இழுத்திறுலாக்கு, தசைநாண்களை, விறைப்பாக்க, வலித்திழு, நீட்டிக்கிடத்து, பரப்பி வை, முழுதுற நீட்டு, எட்டி நீட்டு, முழு விரிவுபடுத்து, மிகைப்படுத்து, சொற்பொருள் வகையில் எல்லைமீறி விரிவுபடுத்து, நீள், குறிப்பிட்ட நீளமுடையதாயிரு, நிண்டுகிட, பரவுறு, குறிப்பிட்ட பரப்புடையதாயிரு, பரந்து கிட, உடல் நீட்டிக்கிட, நீளத்தக்கதாயிரு, விரியத்தக்கதாயிரு, நீளும் இயல்புடையதாயிரு, விரியும் இயல்புடையதாயிரு, நெகிழ்வாற்றலுடையதாயிரு, இழுத்துத் தொங்கவிடு, (இழி.) தூக்கிலிடு.
stretcher
n. நீட்டுபவர், விரித்து வைப்பவர், நீட்டுவது, விரித்து வைப்பது, கையுறை-தொப்பி முதலியன விரித்து வைப்பதற்குரிய கருவி, ஒவியர் திரை உறுதிச்சட்டம், தூக்கு கட்டில், நோயாளி-காயம்பட்டோர் ஆகியவர்களை இட்டுச் செல்லும் தூக்குபடுக்கை, படகுத் தண்டுகைப்பு விட்டம், இயந்திரக் கிடைநிலை உறுப்பு, இயந்திரக் குறுக்குச் சலாகை, சுவர் முகப்பு நீளவாட்டுக் கிடைச் செங்கல், மிகைநவிற்சி, புளுகு.
stretcher-bond
n. சுவர் முகப்பு நீள வாட்டுச் செங்கல் அமைப்புமுறை.
strew
v. சிதறு, தூவு, சிதறுண்ட சிறு பொருட்களால் அரைகுறையாக மூடு.
strewed
v. 'ஸ்டிரியூ' என்பதன் இறந்தகாலம், 'ஸ்டிரியூ' என்பதன் முடிவெச்ச வடிவங்களில் ஒன்று.
strewn
v. 'ஸ்டிரியூ' என்பதன் முடிவெச்ச வடிவங்களில் ஒன்று.
stria
n. (உள்., தாவ., வில., மண்.) படுவரி, மேற்பரப்பில் உள்ள படுக்கைக்கோட்டு வரி அடையாளம், படுகை மடிப்பு, வரை, கிடைக்சாய்வாமி, படுவரித்தொகுதி, கணிப்புவடு, சாய்வரிக்குறிப்பு, சாய்வரி இடைவிளிம்பு.
striate
a. சால்வரி வாய்ந்த, வரிவரியான கிடைநிலைப் பள்ளமார்ந்த, (வினை.) வரிவரிப் பள்ளமாக்கு.
striately
adv. வரிவரிப்பள்ளமாய்.
striation
n. வரிவரிப்பள்ளம் அமைத்தல், வரிவரிப்பள்ள அமைப்பு.
striature
n. வரிவரிப் பள்ளப் பாங்கு.
stricken
-1 a. துன்பப்பட்ட, நோயால் பீடிக்கப்பட்ட, அடிபட்ட, வேட்டையில் காயமேற்ற, மூதூர்ந்த, முதுமையேறிய.
strickle
n. தலைதட்டுக்கோல், முகத்தலளவையில் தலைதட்டியளப்பில் பயன்படுத்தப்படுங் கோல்.