English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
stiff-neck
n. கழுத்துப் பிடிப்பு நோய், குளிர் கடுங் காற்றால் வரும் கழுத்து இறுக்கம், பிடிவாதமுடையவர்.
stiff-necked
a. பிடிமுரண்டான, இணங்காத.
stiffen
v. விறைப்பாக்கு, மேலும் விறைப்பூட்டு, விறைப்பாகு, பின்னும் விறைப்பாகு, பின்னும் கடுமைப்படுத்து, பின்னும் கடுமையாகு, மேலும் செயற்கைத் தன்மையூட்டு, மேலும் செயற்கைத் தன்மையுடையதாகு.
stiffener
n. விறைப்பாக்குபவர், விறைப்பாக்கும் பொருள், சிப்பத்தை இறுக்கிக் கெட்டிப்படுத்துவதற்குப் பயன்படும் பொருள்.
stiffening
n. விறைப்பாக்குதல், விறைப்பு, இறுக்கமாக்குதல், இறுக்கம், கடுமையாக்குதல், கடுமை முனைப்பாக்கம், (பெ.) மேலும் விறைப்பாகிற, இறுக்கமாகி வருகிற, கடுமை முனைப்பாகிற.
stiffness
n. பிடிவாதம், விறைப்பு.
stifle
-1 n. குதிரை பின்கால் மேல்மூட்டு, குதிரை பின்கால் மேல்மூட்டு நோய்.
stifle-bone
n. குதிரை பின்கால் மூட்டெலும்பு, குதிரை முழங்காற் சில்லு.
stifle-joint
n. குதிரை பின்கால் மூட்டு.
stifle-shoe
n. குதிரையின் பின்கால் மூட்டு இலாடம், மூட்டுநோயுள்ள காலைப் பயன்படுத்தி நோய்நீக்க உதவும்படி நோயுறாக் கால்மூட்டுக்கு இடப்படும் இலாடம்.
stigma
-1 n. புகழில் ஏற்படும் இழுக்கு, நற்பெயருக்கு ஏற்படுங் கறை, சூட்டுத்தழும்பு, (தாவ.) சூலக முகடு, பூவின் கருவகப் புழைவாய் முகடு.
stigmatic
n. வடுவுடையவர், அருவருப்பான உருவமுடையவர், உருந்திரிபுற்றவர், திருச்சபை வழக்கில் அருட்டழும்பு பெற்றவர், (பெ.) புகழில் மாசுற்ற, இழுக்கியல்புடைய, நற்பெயர்க் கறையுடைய, நற்பெயர்க்கறை இயல்புவாய்ந்த, சூடிடப்பட்ட, சூட்டுக்குறியுடைய, விகாரமான, அருவருப்பாக உருத்திரிபுற்ற, ஒருமுகப்புடைய, கண்விழி வகையில் ஒருமுகப்புக்கேடு அற்ற.
stigmatism
n. புகழ் மாசு, வடுபட்ட நிலை.
stigmatist
n. அருள் வடுவுற்றவர்.
stigmatization
n. அவதூறு, மாசுரை, படிமாசு, கற்பிக்கப்பட்ட மாசு, குற்றச்சாட்டு, வடுப்பட செயல், கசிபொட்டேற்றுவிப்பு.
stigmatize
v. வடுப்படுத்து, நற்பெயருக்குக் கறை வருவி, அவதூறு கூறு, இகழ்கற்பி, குற்றப்பழிச்சாட்டிற்கு ஆளாக்கு, பழிக்குரியவராகக் குறிப்பிடு, உரிய பழிக்கூறாகச் சுட்டியுரை, சூட்டித் தழும்பிடு, கசிபொட்டேற்று, அறிதுயில் வசியத்தால் குருதிக் கசிபொட்டுக்கள் ஏற்படும் படி செய்.
stik-ball
n. நச்சாவி எறிகடம், கொள்ளைக் கப்பல்களால் கடற் போரில் எதிரி கப்பல் முன் உடைக்கப் பயன்படுத்தப்பட்ட முற்கால நச்சாவிக் குடுவை.
stikke
n. வளைமதில் வலைப்பந்தாட்டம், புல்வெளி வரிப்பந்தாட்டத்தைப் போன்று ஒன்பதடி உயரச் சுவர்களாற் சூழப்பட்ட களத்து மையத்தில் வலைகட்டி ஆடப்படும் விளையாட்டு வகை.
stile
-1 n. கடவேணி, சுவரின் அல்லது வேலியின் மீது ஒருபுறம் ஏறி மறுபுறம் இறங்குதவற்கான படி அல்லது படிக்கட்டுகளின் தொகுதி.
stiletto
n. கரிகை, குறுவாள், துளையாணி, சிறு கண்ணியின் நுண்புழைகள் செய்வதற்கான குத்தூசி, (வினை.) சுரிகையால் குத்து.