English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
status quo
n. முன்பிருந்த நிலை.
statutable
adv. நிலவரச் சட்டப்படி, மன்ற ஆணைச் சட்டப்படி.
statute
n. மன்ற நிறைவேற்றுச்சட்டம், செயற்படும் எழுத்து வடிவச் சட்டம், நிரந்தரவிதி, கூட்டுரிமைக் கழகச் சட்டம், விவிலிய வழக்கில் தெய்விகச் சட்டம்.
statute-book
n. நிறைவேற்றுச் சட்டத்தொகுப்பு.
statute-roll
n. சட்டத்தொகுப்பு.
statutory
a. சட்டமாக இயற்றப்பெற்ற, சட்டப்படி தேவைப்படுகிற, சட்டத்தால் கட்டுப்பாடாகச் சுமத்தப் பெறுகிற.
staunch
-1 n. நம்பிக்கையுறுதியான, முழுதும் நம்பத்தக்க, விடா நனிறியுள்ள, முற்றிலும் பற்றுறுதியுள்ள, கப்பல் வகையில் நீர்புகமுடியாத, காற்றுப்புகமுடியாத.
staunchly
adv. நம்பிக்கையுறுதியுடன், நன்றி மீறாமல், நீர்புகாததாய், காற்றுப் புகாததாய்.
staunchness
n. விடாப்பற்றுறுதி, வழுவா நம்பிக்கையுறுதி, நன்றி பிறழாமை, நீர்புகா நீர்மை, காற்றுப்புகாத்தன்மை.
stauroscope
n. முனை ஒளிதேர் கருவி, மணி உருப்படிகமீது கோடி முனைப்பொளியால் ஏற்படும் விளைவுகளை ஆயுங்கருவி.
stave
n. மிடாவரிப்பட்டிகை, கோல், கம்பி, சலாகை, நீளுருளை, கிணற்றுத் தோவளப் படியடுக்கு வளையம், நீளுருளைப் படியடுக்கு வளையம், பழு, ஏணிப்படி, பா, செய்யுட்பத்தி, (இசை.) இசைமான வரிவடிவுப்பதிவில் விசைவரிச்சட்டம், (வினை.) உடைத்துவிடு, தகர்த்துவிடு, வரிப்பட்டிகையை முறி, வரிப்பட்டிகைகளை நொறுக்கு, பெட்டியை உருத்தெரியாமல் சிதை, தொப்பியை உருத் தெரியாது கசக்கு, நொறுங்கு, துண்டு துண்டாகு, உடைத்துத் துளையிடு, மிடா-படகு ஆகியவற்றில் புழை செய், கோலால் துரத்து, தடுத்து நிறுத்து, தடுத்தகற்று, தட்டித்தடு, தடுத்துக்கடத்திவிடு, தாமதப்படுத்து, வரிப்பட்டிகை இணை, வரிப்பட்டிகை இணைத்துச்செப்பஞ் செய், பழுதுபார்த்துச் சரிசெய், அழுத்தத்தால் உலோகத்தைக் கட்டுறுதிப்படுத்து.
stave-rhyme
n. மோனை, பழங்கால டியூட்டானியர் கவிதையில் முதலெழுத்தியைபு.
staved
v. 'ஸ்டேவ்' என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவங்களில் ஒன்று.
staves, staff(3),
n. pl. 'ஸ்டேவ்' என்பவற்றின் பன்மை.
stavesacre
n. நச்சு விதை வகை, மூட்டைக்கொல்லி நச்சு விதைவகை.
stay
-1 n. தங்கல், தங்கியிருப்பு, குடியிருப்பு, தங்கியிருப்புக் காலம், குடியிருப்புக்காலம், தடுப்பு, தடை, தடுத்து வைப்பு, தற்காலிக நிறுத்தம், இடைநிறுத்தம், நிறுத்தம், தடுப்படக்கம், பொறுதியாற்றல், சகிப்புத்திறம், ஊன்றுகோல், ஆதாரம், (சட்.) நடைமுறைத் தடை, (சட்.) தீர்ப்பு வகையில் நிறைவேற்றத் தடை, (வினை.) தங்கு, தங்கியிரு, காத்திரு, இருந்த இடத்திலேயே இரு, அகலாதிரு, வேறிடம் போகாதிரு, பொறுத்திரு, தாங்கியிரு, நீடித்திரு, தடு, நிறுத்து, நிறுத்திக்கொள், தடுத்தடக்கு, தீர்ப்பு வகையில் ஒத்திவை, உதைகால் கொடுத்துத் தாங்கு, அண்டை கொடுத்து ஆதரி, ஆட்டத்தில் புறநீக்கப்படாதிரு, புறமாகாதிரு, (பே-வ) இடையில் சிறிது நிறுத்திக்கொள், சற்றுப்பொறுத்துக்கொள்.
stay-at-home
n. வீட்டுவாசல் தாண்டாதவர், (பெ.) வீட்டிலேயே அடைபட்டிருக்கிற.
stay-bar
n. கட்டிட உதைகால், இயந்திர அண்டைக்கட்டு.
stay-down strike
n. உள்ளிருப்பு வேலைநிறுத்தம்.