English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
stationary
n. இடம்பெயராதவர், (பெ.) நிலையிருப்பான, இடம் பெயராத, இடம்பெயர்த்துக்கொண்டுசெல்ல இயலாத, இடத்துக்கிடம் கொண்டுசெல்லப்படாத, நிலையமர்விற்குரிய, தூக்கிச் செல்வதற்குரியதல்லாத, அளவுமாறாத,தொகைமாற்றமில்லாத, கூடுதல் குறைதலற்ற, பண்பு மாற்றமில்லாத, கோளினங்கள் வகையில் நிரைகோட்டில் நிலையாயிருப்பதாகக் காட்சியளிக்கிற, திணைகாலஞ் சார்ந்த, நோய்கள் வகையில் தனியிடம் தனிவேளை சார்ந்த.
stationer
n. பணிகல விற்பனையாளர், எழுதும் பொருள்கள் விற்பவர்.
stationery
n. எழுதும் பொருள்கள்.
stations
n. pl. கடற்படைக் கப்பற் பணியாளர் பாளையக் குடியிருப்பு.
statist
n. புள்ளிவிவரத் தொகுப்பர், அரசியற்கலையறிஞர்.
statistical
a. புள்ளித்தொகுப்பியல் சார்ந்த, கணிப்பியலான.
statistician
n. புள்ளிவிவரத் தொகுப்பாளர்.
statistics
n. pl. புள்ளித்தொகுப்பியல்.
statistology
n. சமுகப்புள்ளிவிவரநுல்.
statocyst
n. (தாவ.) மரவகையின் சமநிலை உணர்வுறுப்பு, புவியீர்ப்புணர்வதாகக் கருதப்படும் தாவரப்பசைப் பொருள்துகள் உயிர்மம்.
statolith
n. தாவரப் பசைப்பொருள் துகள், தாவரச் சமநிலை உணர்வுறுப்பிலுள்ள தொடர்பற்ற நுண்பிழம்பு.
stator
n. (மின.) உந்துமின்கல நிலைக்கூறு, மின்னாற்றல் பிறப்பிக்கும் பொறியில் அசையாதிருக்கும் பகுதி.
statoscope
n. நீரில்லாத நுண்ணழுத்தமானி, நுட்ப அழுத்த வேறுபாடு காட்டும் நீர்மம் வழங்காக் காற்றழுத்தமானி.
statuary
n. சிற்பி, குழைபொருட் கலைஞர், சிறப்க கலை, (பெ.) சிலைகளுக்குரிய, சிலைகளுக்கான.
statue
n. உருவச் சிலை, படிமம்.
statuesque
a. சிலை போன்ற, வீறமைதி சான்ற, பெருமிதஅழகு வாய்ந்த.
statuesqueness
n. சிற்பச் சிறப்புடைமை, சிலை போன்ற பண்பு.
statuette
n. சிறுபடிமம், சிற்றுருப் படிமம், சிறுதிறச் சிலை.
stature
n. உயர்த்தி, ஆள்வகையில் உடலுயர்வளவு.
status
n. சமுதாயப் படிநிலை, உறழ்நிலை, தகுநிலை.