English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
serradilla
n. கால்நடைத் தீவன மணப்புல் வகை.
serrate
-1 a. (உள்., தாவ., வில.) இரம்பப்பல்போல் வெட்டப்பட்ட.
serration
n. இரம்பப்பல் விளிம்பமைப்பு.
serrefile
n. கூழைப்படைப் பின்வீரர்.
serricorn
n. (வில.) இரம்பப்பல் உணரிழை வண்டு வகை, (பெ.) இரம்பப்பல் விளிம்புள்ள உணரிழைகளையுடைய.
serried
a. படைவீரர் வகையில் தோளோடு தோளாக இடையீடின்றி நெருங்கிய, மரவரிசை வகையில் உட்செறிந்த, மிடைந்து அடர்ந்த.
serriferous
a. (வில., தாவ.) இரம்பம் போன்ற உறுப்புடைய.
serriform
a. இரம்பம் போன்ற வடிவமைந்த.
serrirostrate
a. பறவை வகையில் இரம்பப்பல் விளிம்புள்ள அலகுடைய.
serruleate, serrulated
a. நேர்த்தியான இரம்பப்பல் விளிம்புடைய, சிறு வெட்டுக்கீறல் வரிசைகளையுடைய.
serum
n. மோர்த்தௌிவு, குருதியின் ஒளியூடுருவும் நீர்த்த பகுதி, ஊபூர், உடலில் உணவிலிருந்து ஊறும் கொழுப்புக் கலந்த வெள்ளை நிணநீர், (மரு.) பண்டுவப்பொருளாகப் பயன்படுத்தப்படும் விலங்கின் குருதி நிணநீர்.
serval
n. நெடுங்காற் பூனை வகை.
servant
n. வேலையாள், ஊழியர், ஏவலர், பணியாளர், ஊழியத்துறை உறுப்பினர், ஆர்வத்தொண்டர், நாகரிகப் பணிவுக் குறிப்புச்சொல்.
servant-maid
n. வேலைக்காரி.
serve
n. பந்தாட்டத்தில் தொடக்கப் பந்தடி, முதற்பந்தடி முறை, (வினை.) வேலைசெய், பணியாளாயிரு, தொண்டூழியஞ் செய், ஏவல் செய், பணியாள்று, பணித்துறையில் ஊழியஞ் செய், பணித்துறையில் அமர்ந்திரு, தொண்டாற்று, பொதுப்பணிசெய், தேவைகளுக்கு உதவு, உதவியாயிரு, தேவை நிறைவேற்ற, தேவைகளுக்கு உதவு, பயன்படு, நல்ல பயன்உடையதாயிரு, தக்க கருவியாயிரு, மூலப்பொருளாய் அமைவுறு, நோக்கம் ஈடேற உதவு, காரியத்திற்குப் பயன்படு, தேவை நிறைவேறறத்தக்கதாக அமைவுறு, போதியதாயிரு, சாதகமாயிரு, உணவுமேசை ஒழுங்கு செய், உணவு மேசையிற் பணியாற்று, பரிமாறு, உணவு விளம்பு, உணவு பக்குவஞ்செய்து வழங்கு, சட்டப்படி ஆளிடம் கொண்டு சேர்ப்பி, பங்கீடு செய்து வழங்கு, பணித்துறைக்காலம் பணிசெய்து கழி, தண்டனைக் காலம் தண்டனை அனுபவித்துத்தீர், இயந்திரம்-துப்பாக்கி முதலியவற்றின் வகையில் இடையறவுறாமற் பேணு, நடைமுறைப்படுத்திப் பேணு, பொலிக்குதிரை வகையில் பெடையினைப் பொலிவி, நடத்து, தக்கபடி எதிரீடு செய், பந்தாட்ட வகையில் பந்தடி, பந்தினைக் கையேற்று எறி.
server
n. உணவு பரிமாறுபவர், சமயகுருவினுக்குரிய வழிபாட்டுவினைத் துணைவர், முதற் பந்தெறியாளர், உணவுத்தட்டம், உண்ணுதற்குரிய கவர்முள்-கரண்டி.
Servian
n. செர்பியா நாட்டவர், செர்பியா நாட்டுமொழி, (பெ.) செர்பியா நாட்டிற்குரிய, செர்பியா நாட்டு மொழிக்குரிய,
Servian wall
n. பண்டை ரோமாபுரியில் குடியரசிற்கு முற்பட்டகால அரசன் செர்வியஸ் டல்லியஸ் கட்டிய மதில்.