English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
prithee
int. அருள்கூர்க, தயவுசெய்க.
privacy
n. தனிமை, தனிமறைவு, மறைசெய்தி, இரகசியம், அந்தரங்கத்தன்மை, தனிமறைவிடம், ஒதுங்கிய தன்மை, தனி ஒதுக்கிடம், தொலை ஒதுக்கிடம், வாழ்க்கையிலிருந்து விலகிய நிலை, பொதுவிளம்பரம் நாடாநிலை.
privat-docent, privat-dozent
n. தனியார் ஆசிரியர்.
private
n. தனிமை, தனிமுறைக்குழு, தனிவாழ்வு, (பெ.) தனிமுறையான, பணிமுறை சாராத, பொதுமுறையில் வெளியிடப்படாத, தனி உரிமைப்பட்ட, சொந்தமான, தனிமுறைப்பட்ட, பொதுமக்களுக்குரியதாகாத, திரைமறைவான, பொதுமக்கள் அறியாத, தனிமறைவான, இரகசியமான, தெரிவிக்காத, அந்தரங்கமான, ஒதுக்குப்புறமான, படைவீரர் வகையில் ஆணைபெறா அலுவலர்கீழ்ப் படைவீரராயிருக்கிற.
Private limited
தனிப்புற மட்டிட்டது, மட்டிட்டது (த) தனியார் (பொறுப்பு வரையறுக்கப்பட்டது)
privateer
n. எதிரிநாட்டுக் கப்பல்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குரிய பற்றாணையுரிமை பெற்ற தனிப்பட்டவர்களின் போர்க்கப்பல், (வினை.) பற்றாணையுரிமை பெற்ற தனிப்பட்டவர்களின் போர்க்கப்பலில் இடம்பெற்றுச் செல்.
privation
n. தரமிழத்தல், தன்மை இழத்தல், நல அழிவு, நல்குரவு, வறுமை.
privative
a. இன்மை சுட்டிய, இழப்பு சுட்டிய, இயல்பு நீங்கப்பெற்ற, குண அழிவுக்குரிய, (இலக்.) இன்மை தெரிவிக்கிற, எதிர்மறைப்பண்பு சுட்டுகிற.
privet
n. வேலிப் புதர்ச்செடி வகை.
privet-hawk
n. வேலிப் புதர்ச்செடிகளில் முட்டையிடும் பெரிய விட்டில் பூச்சிவகை.
privilege
n. சிறப்புரிமை, குழு உரிமைநலம், சிறப்புரிமை நலம், தனிச்சலுகை, உரிமைப்பேறு, உரிமைமேம்பாடு, (வினை.) சிறப்புரிமையளி, தனிச்சலுகைக்குரியவராக்கு, பொறுப்புகளிலிருந்து தனி விலக்கு அளி.
privity
n. (சட்.) தனிமறைவு காப்பமைதி, இரகசியம் உணர்ந்து அமைதல், இருகட்சிகளுக்கிடையேயுள்ள சட்டத்தால் ஒப்புக்கொள்ளப்பட்ட உறவு.
privy
n. மலசலக் கழிப்பிடம், (சட்.) செயலில் உடனெத்தியலுபவர், இரகசியத்தில் உடன்பங்கு கொண்டவர், செய்தியில் உள்ளுடந்தையாயிருப்பவர், (பெ.) பொருள் வகையில் மறைவான, இடவகையில் ஒதுக்கமான, இரகசிய வகையில் தெரிந்தடக்கமாயிருக்கிற.
prize
-1 n. பரிசு,போட்டிகளில் வெற்றிச்சின்னம், கலைப்பொருள், மேம்பாடு கருதிக் கொடுக்கப்படும் சிறப்பு அடையாளப்பொரள், அருமுயற்சியின் பயன், முயன்றுபெற்ற பொருள், போட்டியிட்டுப் பெற்ற பொருள், அரும்பெற்ற பேறு, முயன்றுபெறத்தக்கது, எதிர்பாராப்பேறு, யோகச் சீட்டுக்களிற் கிடைக்கும் பொருள், (வினை.) உயர்வாக மதி, பாராட்டு, போற்று, மதித்துப்பேணு.
prize-court
n. கடற்போரில் கைப்பற்றிய பொருள்களைப்பற்றிய தீர்வுக்குரிய கடற்படைத் தலைமை நிலைய நீதிமன்றம்.
prize-fight
n. பணத்திற்காகப் போடப்படும் குத்துச்சண்டை.
prize-money
n. கடற்போரில் வென்று கைப்பற்றிய பொருள்களை விற்பதால் வரும் பணம்.
prize-ring
n. பந்தயக் குத்துச்சண்டை வட்டரங்கு, பந்தயக் குத்துச்சண்டைப் பயிற்சிக்கான வட்டரங்கம்
pro
-1 n. (பே-வ) உடற்பயிற்சி விளையாட்டையே வாழ்க்கைத்தொழிலாகக் கொண்டவர், தொழிற்பயிற்சித் செவிலியர்.