English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
octagonal
a. எண்கோணமான, எட்டுப்பக்கங்களையுடைய.
octahedron
n. எண்முகப்பிழம்புரு.
octane
n. நீர்மகரிமத் தொடர்மங்களில் ஒன்று.
octant
n. அரைக்கால் வில்வரை, வட்டச் சுற்றுவரையின் எட்டிலொரு கூறான வில்வரை, அரைக்கால் வட்டக்கூறு, இரண்டு ஆரங்களுக்கிடைப்பட்ட வட்டப்பரப்பின் எட்டிலொரு கூறு, அரைக்கால் வாளகம், முத்தசை செங்குறுக்கீட்டால் ஏற்படும் இடவெளியின் எண்கூறுகளில் ஒன்று. வானியலிலும் கடற்செலவிலும் பயன்படுத்தப்படும் எண்ம வட்டமானி, (வான்) கோள் நெறி வட்டத்தின் 45 பாகைக் கூறு, (வான்) மதி நெறிவட்டத்தில் 45 பாகைக் கோணத்திலுள்ள குறிப்பிடம்.
octastyle
n. எண்தூண் மாடம், எண்தூண் முகப்பு, (பெயரடை) முகப்பில் எட்டுத்தூண்களையுடைய, முனைக்கோடியில் எட்டுத் தூண்களையுடைய.
octave
n. விழாநாளுக்கு எட்டாம் நாள், விழாநாள் முதல் எட்டு நாள் தொகுதி, எட்டன் தொகுதி, எட்டடிச்செய்யுள், பதினான்கடிச் செய்யுளின் முதல் எடடடி, (இசை) சுரத்தின் மேற்பாலை, பன்னிரண்டு அசைசுரத்தொகதி, மேற்பாலைக் கள்விக்கட்டை, வாட்போரில் ஒரு நிலை, 13.5 காலன் அளவு கொண்ட இன்றேல் விடா.
octave-coupler
n. இசைக்கருவியில் எட்டுச் சுரங்களை இணைக்குங் கருவி.
octave-flute
n. புல்லாங்குழல் மேற்பாலைக்கட்டை.
octavo
n. எட்டாக மடித்த தாள் அளவு, எண்மடிப்புத்தகஅளவு.
octavus
n. பள்ளிவழக்கில் ஒரே பெயருடையவரில் எட்டாமவர்.
octennial
a. எட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்கிற, எட்டாண்டு நிடீத்திருக்கிற.
octet, octette
எட்டுப் பாடகர்கள் தொகுதி, எட்டு நடிகர்கள் தொகுதி, எண்மர் பாடுவதற்கான பாடல், எட்டு நடிகருக்கான நடிப்புப்பகுதி, எட்டடிப்பாடல், பதினான்கடிப்பாடலில் முதல் எட்டடி.
octillion
n. பத்து லட்சம் கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி ஒன்றுடன் 4க்ஷ் சுன்னங்களைச் சேர்த்தால் ஆகும் தொகை.
octingentenary
n. எண்ணுறாவது ஆண்டு விழா.
October
n. ஆங்கில ஆண்டின் பத்தாவது மாதம்.
Octobrist
n. (வர) ருசிய சட்டசபையில் மிதவாதக் கட்சியின் உறுப்பினர், (பெயரடை) ருசிய நாட்டு மிதவாதக் கட்சியைச் சார்ந்த.
octodecimo
n. பதினெண்மடித்தாள் அளவு, பதினெண்மடிப் புத்தக அளவு.
octogenarian
n. எண்பது வயதடையவர், (பெயரடை) எண்பது வயதுடைய, எண்பது வயதுடையவரைச் சார்ந்த.
octonal
a. எட்டன்மானம் சார்ந்த, எட்டடுக்கிய, எண்மடியான, நாணயவகையில் எண்மடிப் பகுப்புடைய.
octonarian
n. எண் சீரடி, (பெயரடை) யாப்பு வகையில் எண் சீருடைய.