English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
overpassed, overpast
கடந்த, சென்ற, கழிந்த.
overpay
v. மிகையாக ஊதியங் கொடு, மிகுதியாகக் கட்டு.
overpersuade
v. விருப்பமில்லா நிலையிலும் மட்டுமீறி வலியுறுத்தி இணங்கச்செய்.
overpitch
v. மரப்பந்தாட்டத்தில் இலக்குக் கட்டைகளுக்கு மிக அண்மையில் விழும்படி பந்துவீசு.
overpoise
v. நிறையில் விஞ்சு, மதிப்பில் விஞ்சு.
overpot
v. மிகப்பெரிய தொட்டியில் செடி நடு.
overpower
v. கீழடக்கு, அடக்கி ஆட்கொள்ளு, மிகை ஆற்றலால் பயனற்றதாக்கு, விஞ்சிய ஆற்றலுடையதாயிரு, தடுக்கமுடியாததாக்கு.
overpressure
n. மிகை அழுத்தம், மிகுவேலை நெருக்கடி, மிகைநெருக்கடி.
overpriaise
n. மிகு புகழ்ச்சி, (வினை) மிகுதியாகப் புகழ், வரம்பு கடந்து புகழ்ச்சிசெய்.
overprint
v. அச்சடித்த பக்கத்தில் மேலும் அச்சடி.
overrate
v. மட்டுமீறி உயர்வான மதிப்புக்கொள், அளவுமீறி மதிப்பிடு, உயர்விலை மதிப்பிடு.
overreach
-1 n. அளவிறந்த ஊக்குதல், அளவுமீறிய முயற்சியால் ஏற்படுந் தோல்வி.
override
v. குதிரைவகையில் ஏறி ஊர்ந்து சோர்வுறச்செய், குதிரைப்படையின் காலடிக்கீழ் அழியவிடு, மதித்துச்செல், புறக்கணி, ஒதுக்கித் தள்ளு, இணங்குமறு, மேலுரிமைப் பாட்டில் பணிய மறு, அறுவை மருத்துவத்தில் எலும்பு வகையில் ஒன்றன்மீது ஒன்றாகக் கிட.
overripe
a. அளவுமீறிக் கனிந்த, கனிந்தளிந்த.
overrule
v. ஒதுக்கித் தள்ளு, உதறித்தள்ளு,
overrun
v. விஞ்சி ஓடு, பரந்து ஒழுகு, ஓடித் தப்பு, எல்லை கட, வரம்புமீறு, மலிந்துவடி, பொங்கிவடி, பொங்கிவழி, ஓடிக்களைப்புறு, ஓடித் தீங்கிற்கு ஆளாகு, எல்லைகடந்து வளர், எங்கும் பரவி நிரப்பு, கடந்து பரப்பு, படர்ந்து பரவு, படர்ந்து கவிந்து நிலைகொள், கொள்ளைப்பூச்சி பொட்டுக்கள் வகையில் நெருங்கி மிடைவுறு, படைபரப்பு, படைகளைப் பரவலாகத் திரிய விடு, பரந்தழிய செய், படையெடுத்துப் பாழ்படுத்து.
oversailing
a. கற்கட்டிய அமைப்பு வகையில் கீழ் இருப்பதைவிட மேற்பகுதி முனைப்பாக நீண்டிருக்கிற.
oversee
v. மேலிருந்து கீழ்நோக்கு, வேலையாள்களையும் வேலையையும் மேற்பார்வை செய், கண்காணி.