English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
overblow
v. (இசை) அடிப்படைப் பண் எழுப்புவதற்குப் பதிலாக இசைவிணக்கமுடைய இசையுண்டாகும்படி மிகுந்த ஆற்றலோடு குழலுது.
overblown
a. புயல் முதலியன வீசி ஓய்ந்து விட்ட, மலர்கள் வகையில் முழுதும் மலர்ந்த, மலர்ச்சிப் பருவம் கடந்துவிட்ட.
overboard
adv. கப்பலிலிருந்து வெளியே.
overbrim
v. விளிம்புவரை பொங்கித் ததும்பு.
overbuild
v. கட்டிடங்களால் நிரப்பு, மிகநெருக்கமாகக்கட்டு, மேற்கட்டுமானம் அமை, மட்டுமீறி மேலே கடடி எழுப்பு, மட்டுமீறி நம்பிக்கை வை.
overbuilt
a. மிக அதிகமான கட்டிடங்களையுடைய.
overburden
v. நிறையச் சுமத்து.
overbusy
a. மட்டுமீறி ஈடுபட்ட, மிகுதியாக வேலையுள்ள, வேலையில் மிக்க கவனம் செலுத்தியுள்ள.
overbuy
v. தேவைக்குமேல் மிகுதியாக வேலையுள்ள.
overcall
v. சீட்டாட்ட வகையில் மேற்கேள்வி கேள், மிகு கேள்வி கேள்.
overcanopy
v. மேற்கட்டிபோல் மூடு, விதானம்போல் மேல் மறை.
overcapitalize
v. மிகு முதலீட்டு அளவு உறுதிசெய்.
overcare
n. அளவுமீறிய முன்னெச்சரிக்கை, மிகு விழிப்புடைமை.
overcast,
மூடாக்கு, (பெயரடை) மூடாக்கிட்ட, மப்பு மந்தாரமான, இருள் பரந்த, துயர்பரவிய, (வினை) மூடாக்கிய, மப்புப்போடு, இருள் பரப்பு, துயர்நிழல் பரப்பு.
overcharge
-1 n. மின்மிகைச்செறிவு, வெடிமருந்து மிகு செறிவு, மிகுவிலை, மிகைக்கட்டணம், மிகுசுமை.
overcome
-1 a. களைப்பு முதலியவற்றால் ஆட்கொள்ளப்பட்ட, உணர்ச்சி முதலியவற்றிற்கு மற்றிலும் ஆட்பட்ட, உதவியற்றுப்போன, செயலற்றுப்போன, தன்னாற்றலிழந்த.
overcon-fidence
n. மட்டுமீறிய தன்னம்பிக்கை.
overcrop
v. விடாது தொடர்ந்து பயிரிடுவதனால் நிலத்தை வறிதாக்கு.