English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
orator
n. நாவலர், மேடைப்பேச்சுத் திறமையுடையவர், சொல்வன்மை வாய்ந்த பொதுப்பேச்சாளர், சொற்பொழிவாளர்.
oratorical
a. நாவன்மை வாய்ந்த, செயற்கை அணி நயத்துடன் பேசுகிற, சொற்றிறம் வாய்ந்த, சொற்பொழிவு சார்ந்த, சொற்கோப்புக்கலை சார்ந்த.
oratorio
n. நாடக இசைப்பண்புடன் கலந்த சமயச்சார்பான புண்ணியக் கதைக்கச்சேரி.
Oratory
-1 n. 1564-இல் ரோமாபுரியில் நிறுவப்பட்ட நோன்புகள் மேற்கொள்ளாத எளிய ரோமன் கத்தோலிக்க குருமார்கள் கழகம், ரோமாபுரியில் நிறுவப்பட்ட நோன்புகள் மேற்கொள்ளாத எளிய ரோமன் கத்தோலிக்க குருமார்கள் கழகத்தின் பிறநாட்டுக் கிளை.
orb
n. வட்டம், வட்டு, வட்டத்தட்டு, வட்டத்தகடு, வளையம், உருண்டை, கோளம்,. வான் ஒளிக்கோளம், விண்மண்டலம், விழிக்கோளம், (செய்) கண், சிலுவை ஏந்திய கோளச்சின்னம், முழுமொத்தம்,. திரளுரு, (வினை) சூழ், கோளமாகத் திரட்டு, கோளமாகத் திரள்.
orbicular
a. வட்டமான, வட்டத்தகட்டு வடிவான, மோதிர வடிவுடைய, கோளவடிவுள்ள, உருண்டையான, திரண்டுருண்ட, ஒரே முழுமொத்தமான, ஒழுங்குபட்ட முழுமையினையுடைய.
orbit
n. கட்குழி, பறவையின் கண்சூழ் வரை, பூச்சியின் கண் சூழ்ந்த வளையம், கோள்வீதி,. கோளப்பாதை,. வால் வெள்ளியின் நெறி, வரம்பு, செயல் எல்லை.
Orcadian
n. ஆர்க்னி தீவுகளில் வாழ்பவர், ஆர்க்னி தீவுகளைச் சேர்ந்தவர், (பெயரடை) ஆர்க்னி தீவுகள் சார்ந்த.
orchardist, orchardman
n. பழத்தோட்டக்காரர்.
orchestic
a. ஆடல் சார்ந்த.
orchestra
n. பண்டைய கிரேக்க நாடக அரங்கின் முகப்பில் இசைக் கருவியாளர் இருந்து வாசிப்பதற்குரிய அரைவட்டப் பகுதி, நாடக-நடன அரங்குகளில் இசைக்கருவி இயக்குநர் மேடை, இசைக்கருவியாளர்கள் குப, கூடுகொள் இன்னியம், பல்லியம்.
orchestral
a. கூடுகொள் இன்னியஞ் சார்ந்த, பல்லியத்துக்குரிய.
orchestrate
v. கூடுகொள் இன்னிய வாசிப்பிற்காகப் பாடல் இயக்கு, கூடுகொள் இன்னிய வாசிப்பிற்காக ஏற்பாடுசெய்.
orchestrina, orchestrion
n. பல்லியம் போன்ற இசைபொலி எழுப்புதற்கென வகுக்கப்பட்ட பெருங்குழல் இசைக்கருவி.
orchid
n. (தாவ) பகட்டு வண்ணமலர்ச் செடிவகை, ஒக்கிட்டு.
orchidist
n. பகட்டு வண்ண மலர்ச்செடி ஆர்வலர்.
orchidology
n. பகட்டுவண்ண மலர்ச்செடி ஆய்வுநுல்.
orchidomania
n. பகட்டு மலர்ச்செடிப் பித்து.