English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
opulent
a. செல்வமிக்க, பொருள்வளமுடைய, செழுமையான, தாராளமான, சேமவளமுடைய.
opus
n. இசை-இலக்கிய எழுத்தாண்மைத் துறைகளில் கலை ஆக்கப்படைப்பு.
opuscule, opusculum
சிற்றிலக்கியப் படைப்பு, சில்லறை இசைப்பாடல்.
or
-1 n. (கட்) மரபுவழிச் சின்னங்களிற் செதுக்கிய புள்ளிகளால் காட்டப்பெறும் மங்கலான பொன் அல்லது மஞ்சள் நிறம்.
or(2),
conj. அல்லது, இரண்டில் ஏதோ ஒன்றாக, என்பவற்றுள் ஏதோ ஒன்றாக, அதாவது, அல்லாவிட்டால்.
orach
n. தோட்டக் காய்கறிச் செடிவகை.
oracle
n. தெய்வ வாய்மொழித்தலம், யூதர்கோயில் கருவறை, தெய்வ வாய்மொழியாளர், வருங்குறியுரைப்போர், முன்னறிவுடையோர், அறிவர், உறுதுணையாளர், சான்றோர், விரிச்சி, முன்னறிவுரை, இருபொருளுரை, தெய்வமொழி., இறைவாக்கு, பொய்யாமொழி, தோலா நல்லுரை, பொன்றாத்துணை, தெய்விக வழிகாட்டுச் சின்னம்,. தவறாக்குறி, (வினை) வாய்மொழித் தெய்வமாகக் கூறு, விரிச்சியுரை.
oracular
a. தெய்வமொழி சார்ந்த, விரிச்சியின் இயல்பு வாய்ந்த, குறி சொல்வது போன்ற, வருங்குறி சொல்லுகிற, தவறா வாய்மையுடைய, தெய்வத்தன்மை வாய்ந்த, இரு பொருளுடைய, ஐயப்பாடான, புரிதான.
oral
n. (பே-வ) வாய்மொழித்தேர்வு, (பெயரடை) பேசப்படுகிற, வாய்மொழியான, (உள்) வாய்சார்ந்த.
orang-outang, orang-utan
n. மனிதக்குரங்கு, வாலில்லாக் குரங்குவகை.
Orange
-1 n. ரோன் ஆற்றின் கரையிலுள்ள நகரம், (பெயரடை) 'ஆரஞ்சு இளவரசர்கள்' குடும் சார்ந்த, ஆலந்திலும் பிரிட்டனிலும் அயர்லாந்திலும் 'ஆரஞ்சு இளவரசர்' கட்சியை ஆதரிக்கிற, ஆரங்சுக் கழகஞ் சார்ந்த, ஆரஞ்சுக் கழகத்தை ஆதரிக்கிற, அயர்லாந்தில் முனைத்த புரோடஸ்டண்டு ஆதிக்கக் கொள்கையுடைய.
orange-blossom
n. மணமகள் அணிந்துகொள்ளும் கிக்சலிமரத்தின் வெண்மலர்கள்.
orange-colour
n. செம்மஞ்சள் நிறம்.
orange-fin
n. வரால் மீன்வகை.
orange-tip
n. முன்சிறகின் முனையில் 'ஆரஞ்சு' நிறத் திட்டுடைய வண்ணத்துப்பூச்சி வகை.
orangeade
n. கிச்சிலிப்பழச் சாற்றுப்பான வகை.
Orangeman
n. முனைத்த புரோட்டஸ்டண்டு ஆதிக்கம் நிலை நாட்டுவதற்காக 1ஹ்ஹீ5-இல் அயர்லாந்தில் அமைக்கப்பட்ட கழகத்தின் உறுப்பினர்.
orate,
v. சொற்பொழிவுசெய், உரத்துப்பேசு.
oration
n. சொற்பொழிவு, பேருரை, மேடைப்பேச்சு, (இலக்) மொழி, பேசும்முறை.