English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
nostrum
n. கைம்மருந்து, போலி மருத்துவர் மருந்து, அரசியல் தனியுரிமை பெற்ற மருந்துச்சரக்கு, உதிரித்திட்டம், வல்லுநர் துணைபெறாத தனி மனிதரின் அரசியல்-சமுதாயச் சீர்திருத்தத் திட்டம், தனிமுறைவகை.
nosy
n. பெருமூக்கு, (பெ.) பெருமூக்குடைய, நெடியிடைய, தேயிலை வகையில் நறுமணமுடைய, வாடைவகை திரிபுணர்வுடைய.
not
adv. இன்றி, இல்லாது, அல்லாது.
not-being
n. உள்பொருள் இன்மை, இல்பொருள்நிலை.
nota bene.
கீழ்வருவதைக் கவனி, பின்வருவதைக் காண்.
notability
n. குறிப்பிடத்தக்க தன்மை, குறிப்பிடத்தக்கவர், சிறப்புடையவர், புகழ் மிக்கவர்.
notable
n. சிறப்புடையவர், புகழ்மிக்கவர், பெரியவர், (பெ.) குறிப்பிடத்தக்க, சிறப்புடைய, முனைப்பாகத் தெரியக்கூடிய, மகளிர் வகையில் வீட்டுவேலைகளில் திறமையுடைய, (வேதி.) தௌிவாகத் தெரியக்கூடிய.
notary
n. ஆயத்துறை எழுத்துப்பதிவாளர், ஆவணங்கள் எழுதவும் பதியவும் அமர்த்தப்படும் பணியாளர்.
notation
n. குறிமான முறை, கணக்கியலில் இலக்கம், எண்மானம், உருக்கணக்கியலில் உருமானம், இசைத்துறையில் இசைக் குறிமானம், குறிப்பு, குறிப்புரை.
notch
n. வடு, வெட்டுத்தடம், வெட்டுக்குறி, இடுக்கமான விடர்ப்பாதை, மரப்பந்தாட்டத்தில் கெலிப்புக்குறி, (வினை.) வடு உண்டுபண்ணு, வெட்டுக்குறியீடு, மரப்பந்தாட்டத்தில் ஓட்ட எண்கள் எடு, படிக்கட்டு வரிசையில் படிகளைப் புகுத்து.
notch-wing
n. அந்துப்பூச்சி வகை.
notched
a. படுவுடைய, வெட்டுந் தடங் கொண்ட.
note
n. தனிக்குரலிசை, இசைக் குறியீடு, சுரம், பறவைகளின் குரலிசைப்பு, தொனி, தனிப்பண்பு, உயரிக்கூறு, அடையாளக் குரல், அடையாளக் குரலிசைப்பு, கவனக் குறிப்பு, விவரம், நினைவுக் குறிப்பு, சுருக்கக் குறிப்பு, குறியீடு, குறிப்பீடு, குறிப்புரை, உரை விளக்கம், குறிப்புச் சீட்டு, கடிதக் குறிப்பு, அரசியலறிவிப்பு, பத்திரம், கைச்சீட்டு, உறுதி முறி, காசு முறி, சிறப்பு, பெருஞ்சுட்டு, (வினை.) உன்னிப்பாக நோக்கு, கூர்ந்து பார், குறி, கவனி, மனத்திற் பதியவைத்துக்கொள், குறிப்பீடு, குறித்துக்கொள், குறிப்புரை எழுது.
note-paper
n. கடிதம் எழுதுவதற்கான தாள் வகைகள்.
notecase
n. பையுறை, சட்டைப் பையிலிட்டுக் கொண்டு செல்லத்தகும் சிறு பை.
noted
a. பெருஞ்சுட்டு வாய்ந்த, பெயர்பெற்ற.
noteworthy
a. குறிப்பிடத்தக்க, கவனிக்கத்தக்க.
nothing
n. ஒன்றுமின்மை, எதுவுமின்மை, இல்பொருள், வெறுமை, சூனியம், சிறுதிறம், அற்பமானது, (கண.) இன்மை, சுன்னம், இல்லாதது, சமய நம்பிக்கை வகையில் பந்த மதப்பிரிவினையுஞ் சாராதவர், கடவுட் பற்றிய கருத்தற்றவர், (வினையிடை.) ஒரு சிறிதுமின்றி, ஒரு வகையிலமின்றி, எதுவுமின்றி.
nothingness
n. இல்பொருள் நிலை, ஒன்றுமில்லா நிலை, இல்லாப்பொருள், பயனற்ற தன்மை, சிறுதிறத் தன்மை, சிறப்பற்றது.