English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
nematode
n. நீண்டுருண்ட வடிவுடைய புழுவகை, (பெ.) நீளுருள் வடிவுடைய.
nemesis
n. பழித்தெய்வம், சூழ்வினை ஆற்றல், கலை இலக்கியத் துறையில் இயல்பான அறமுறைப் பழிவிளைவு.
nemine contradicente
adv. யார் மறுப்புமின்றி, எதிர்வாக்கில்லாமல், ஒருமுகமாக.
nenuphar
n. அல்லி மலர்வகை.
neo-cambrian
a. (மண்.) தண்டிலா உயிரூழியின் முதற்பகுதியின் பிற்கூறு சார்ந்த.
neo-hellenism
n. கிரேக்க கொள்கை குறிக்கோள்களின் மறுமலர்ச்சிப் பண்பு.
neo-malthusianism
n. கருத்தடை முறை வழக்காறு.
neo-platonism
n. பிளேட்டோ கருத்துக்களும் கீழ்த்திசைக்குரிய மறைமெய்ம்மைக் கொள்கைகளும் சேர்ந்த மூன்றாம் நூற்றாண்டுக் கலவைக் கோட்பாடு.
neodoxy
n. புதிய கோட்பாடு, புதிய கொள்கை.
neolithic
a. புதிய கற்காலத்தைச் சார்ந்த, பண்பட்ட கருவிகள் பயன்படுத்தப்பெற்ற கற்காலப் பிற்பகுதி சார்ந்த.
neologian
n. சமய சித்தாந்தத் துறையிற் புதுச் சொற்பொறிப்பாளர், இறைமையாய்வு நூல் துறையிற் பகுத்தறிவுச் சார்புடைய.
neologism
n. புதுச் சொற்படைப்பு, புதுப்படைப்புச் சொல், சமய சித்தாந்தத் துறையில் புதுமைக் கருத்துச்சார்பு, சமய சித்தாந்தத்துறையில் புதுப்பகுத்தறிவுக் கோட்பாட்டுச் சார்பு, இறையமையாய்வு நூலில் புதுக்கருத்தேற்பாளர், இறையமையாய்வு நூலில் பகுத்தறிவுச் சார்பு ஏற்பவர்.
neon
n. செவ்வொளி விளக்குக்களில் பயன்படுத்தப்படும் செயலற்ற தனிமவளி.
neontology
n. வாழ் மரபாய்வுநூல், நின்று நிலளம் மரபுடைய விலங்குகள் பற்றிய ஆய்வு நூல்.
neophron
n. எகிப்திய வெண்கழுகு வகை.
neophyte
n. சமயப்புதுவர், புதிதாகச் சமயம் மாறியவர், முற்காலக் கிறித்தவ சமயப்புத்தேற்பாளர், ரோமன் கத்தோலிக்க சமயப் புத்தேற்பாளர், புத்தமர்வுற்ற சமயகுரு, துறவுச்சங்கப் புதுவரவாளர், புதுப்பயிற்சியாளர், புதுமாணவர், அனுபவமற்றவர்.
neoteric
a. புதுமையான, புத்தம்புதிய, அண்மைக்காலத்திய, புது வழக்காறான, புதுவரவான, புதிதுபுகுந்த, புத்தம் புதுப்பாணியான, தற்காலத்துக்குரிய.
neotropical
a. அமெரிக்க வெப்பமண்டலப் பகுதிக்குரிய, அமெரிக்க வெப்பமண்டலப் பகுதியில் காணப்படுகிற.
neozoic
a. (மண்.) தொல்லுயிருழிக்குப் பிற்பட்ட ஊழிகளுக்குரிய, இடையுயிருழி புத்துயிரூழிகட்குரிய.
nepenthe
n. துயர் மறக்க வைக்கும் மருந்து.