English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
morris-tube
n. சிறுதொலை வேட்டுப்பயிற்சிக்காகச் சுழல் துப்பாக்கியின் குழலிற் செருகி வைக்கத்தக்க உறை.
morris, morris dance
n. ஆரவாரப் புனையாடை நடிப்புடன் கூடிய நாட்டுப்புற ஆடல் வகை.
Morrison shelter
n. போர்க்காலக் குண்டு வீச்சு வகையில் மனையக எஃகுமேடைப் பாதுகாப்பமைவு.
morrow
n. (இல) மறுநாள், அடுத்த நாள்.
morse
-2 n. கடல் யானை, நீண்ட தந்தங்களையுடைய கடற் சிங்க இனஞ் சார்ந்த குளிர்மண்டல நீர்விலங்கு வகை.
morsel
n. சிறுவாயளவு, கவளம், துண்டு, துணுக்கு.
mort
-1 n. வேட்டையில் மான் இறந்ததற்கான அடைமயாளக் கொம்பு முழுக்கு.
mortal
n. மனிதன், மாள்வுக்குரியது, ஆள், (பெயரடை) சாவுக்குரிய, மாளுந் தன்மையுடைய, மாள்வுக்கு ஆட்பட்ட, சாகடிக்கக்கூடிய, உயிருக்கு ஊறு விளைக்கக்கூடிய, வாழ்வு மாள்வுக்குரிய, பகை வகையில் சாகும்வரை தீராத, உயிருடன் விடாத, கொடிய, சாக்கொடுமை வாய்ந்த, உயிர் அச்சம் வாய்ந்த, உயிர் போக்குகிற, ஆன்மிகப் பழிகேடான, ஆன்ம நலம் கெடுத்தழிக்கத்தக்க, மிகப்பெரிய.
mortality
n. மாள்வு, இறக்கும் இயல்பு, பெரிய அளவில் உயர் இழப்பு, குறித்த கால அளவல் இறப்புக்கணக்கு, குறித்த பகுதியின் சாக்கணக்கு, சதவீதம்.
mortar
n. கல்வம், குழியம்மி, சிறு பீரங்கி, வாணவேடிக்கைக் காட்சிக் குண்டுகளை வெடிக்கும் இயந்திர அமைப்பு, காரை, சுண்ணாம்பும் மணலுங் கலந்த சாந்து, (வினை) காரைபூசு, சுண்ணச் சாந்தோடு, சேர், சிறு பீரங்கிக் குண்டுகள் கொண்டு எதிர்த்துத் தாக்கு, கோட்டையைச் சிறு பீரங்கிக் குண்டுகளால் தாக்கு.
mortgage
n. அடைமானம், ஒற்றி, ஒடைமானப் பத்திரம், (வினை) அடைமானம் வை, ஒப்படை, பணியில் முழுதும் ஈடுபடுத்து.
mortican
n. பிணத்தை அப்புறப்படுத்தும் பொறுப்பு மேற்கொள்பவர்.
mortify
v. ஒறுத்தடக்கு, தன்னடக்க நிலைக்குக் கொண்டு வா, உணர்ச்சி புண்படுத்து, மானங்கெட இழிவு படுத்து, தசை வகையில் உள்ளழிந்து கெடு, பிளவைக்கு வழியாகு.
mortise
n. துளைப்பொருத்து, பொருத்துமுளையிடும் துளைச்சட்டம், (வினை) துளைப்பொருத்தில் சேர்த்திணை.
mortmain
n. (சட்) ஆள்மாற்றமுடியா அறநிலைச்சொத்து, மாற்ற முடியா அறமுறைச் சொத்டதுநிலை.
mortuary
n. பிணமனை, சிறிதுகாலம் பிணங்கள் வைத்திருக்கப்படும் கட்டிடம், (பெயரடை) சாவுப்றறிய, இறத்தல் சார்ந்த,. புதைவினை சார்ந்த.
Mosaic
பல்வண்ணக் கல், வண்ண வழவழப்புக் கல், பளபளப்புக் கல்
Mosaic(2).
a. யூதர் மூதாதையரான மோசஸ் என்பாருக்குரிய.
mosaquito
n. பெருங்காசு, நுளம்பு.
mosasaurus
n. பல்லியினஞ் சார்ந்த மரபற்றுப்போன தொல்பழங்காலக் கடல் வாழ் பெருவிலங்கு.