English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
minim
n. சுர அலகின் அரை, கையெழுத்தின் செங்குத்துக் கீழ்க்கோடு, நுண்ணுயிர், சிறுதிற உயிர், சிற்றினம், மடத்துச் சிறுதிறத் துறவிளைஞர், மடத்துச் சிறுதிறத் துறவுநங்கை, மருந்து நீரளவை அலகின் அறுபதின் கூறு, (மர) எடைச் சிற்றலகு.
minimal,
a. மிகச்சிறய, மிகக்குறைந்த.
minimalist
n. தற்காலிகமாகக் குத அளவை ஏற்றுக்கொள்ள இணங்குபவர்.
minimize
v. கூடியவரை குறை, இயன்ற அளவு சிறிதாக்கு,. நுண் படித்திறப்படுத்து, கீழ்ப்படிக்கு இறக்கு.
minimum
n. குறுமம், மிகக்குறைந்த அளவு, குறைவெல்லை, (பெயரடை) மிகக் குறைந்த, குறைவெல்லையான.
minimus
n. பள்ளிகளில் ஒரே பெயருடைய இரு பிள்ளைகளில் இளையவனைக் குறிக்குஞ் சொல்.
mining
n. சுரங்கவேலை, சுரங்கத்துறை, (பெயரடை) சுரங்கத்துறை சார்ந்த.
minion
n. அன்புக்குரிய குழந்தை, மனத்துக்குப் பிடித்த ஏவலர், செல்வமான விலுங்கு (அச்சு) எழுத்துச் சிற்றளவு வகை, மிகச் சிறு அச்செழுத்து.
minish
v. குறைபடு, ஆற்றல் முதலியவற்றில் குறைவாக்கு.
minister
n. செயலாற்றுப் பணியாளர், செயலாளர், அமைச்சர், மந்திரி, அரசியல் தூதர், மதகுரு, (வினை) தொண்டாற்று, பணிசெய், உதவியாயிரு, துணையாய் உதவு, கொடு,கொடுத்துதவு, மருந்து வகையில் ஆதரவுடன் கொடு.
ministerial
a. சட்ட நிறைவேற்றம் சார்ந்த, சட்ட நிறைவேற்ற உதவியான, துணைமையான கருவியான, சமய குரு அல்லது அவருடைய ஊழியஞ் சார்ந்த, அமைச்சர் சார்ந்த, அமைச்சரவையினை ஆதரிக்கிற, அரசியல் ஆட்சிக்குழுச் சார்பான.
ministerialist,
நாளரசினை ஆதரிப்பவர்.
ministration
n. சமயத் தொண்டாற்றுதல், பணி உதவி,அளிப்புதவி.
ministry
n. அமைச்சர் தொழில், சமயகுருமார் தொகுதி, அமைச்சர் குழாம், அமைச்சரவை, அரசியல் துறையரங்கம்.
minium
n. சாதிலிங்கம், இலிங்கக்கல், ஈயச் செந்தூரம்,ஈயச் செந்தூரச் செந்நிறம்,.
mink
n. அரைகுறையாக நீரில் வாழும கீரியின உயிர்வகை, கீரியின வகையின் மென்மயிர்த்தோல்.
minnesinger
n. செர்மனியில் 12-14 ஆம் நுற்றாண்டு களில் நிலவிய உயர்குடிக் காதலுணர்ச்சிப் பாடகர் குழு.
Minnie
n. பதுங்குகுழிப் பீரங்கி.
minnow
n. நன்னீர் வாழ் சிறுமீன் வகை.
Mino
a. மைனாஸ் என்ற அரசனின் பெயரால் வழங்கப்படும் கிரீட் மாநிலசத் தொல்பழங்கால நாகரிகம் சார்ந்த.