English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
meerschaum
n. நீரியல் வெளிமக் கன்மகி, நீரியல் வெளிமக் கன்மகியாலான குமிழுடைய புகைகுடிக்கும் குழாய்.
meet
-1 n. வேட்டைக்குழுச் சந்திப்பு, மிதிவண்டியாளர் இடந்தலைப்பாடு, பந்தயப் போட்டியாளர் கூட்டியல்வு, (வினை) எதிர்ப்படு, சந்தி, போரில் எதிரெதிராகு, சென்று காண், சென்றெதிர்கொள், வரவேற்பளி, அறிமுகமாகு, ஒன்றுபடு, ஒருங்குகூடு, இணைவுறு, ஒத்திசைவுறு, ஒத்தியலு, இசைந்து போ, நிறைவு செய், தவணை நிறைவில் பண மாற்றிக்கொடு, வந்தெய்து, சென்றடை, கண்ணுறு, காண், பொருந்து, சென்று மேவு, படு, தொடர்பு கொள், புலனாகு.
meeting
n. கூடுதல், கூட்டம், சந்திப்பு, பொழுதுபோக்கு-களியாட்டம் முதலியவற்றின் குழுமம், வழிபாட்டுக்கூட்டம், திரண்டு கூடிய மக்கள்.
meeting-house
n. கிறித்தவ சமயப் பிரிவினரின் வழிபாட்டிடம்.
megacephalic
a. பெருந்தலையுடைய.
megalith
n. பாரக்கல், பெரிய நினைவுச்சின்னக் கல்.
megalithic
a. பாரக்கல் சார்ந்த, பெருங்கல்லாலான, பெரிய நினைவுக்கல் வழக்காறுடைய.
megalomania
n. தற்புகழ்ச்சிக் கிறுக்கு, தற்பெருமைக் கோளாறு, உயரவாப்பித்து.
megalosaurus
n. மரபற்றுப்போன பாரிய ஊனுணிப் பல்லியுருவ விலங்கு.
megaphone
n. நெடுந்தொலை ஒலிபரப்பும் வாய் முரசம், ஒலிபெருக்கி, (வினை) ஒலிபெருக்கி மூலம் அறிவி.
megapod, megapode
மணல் மேடிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவை வகை.
megascope
n. ஒளி விளக்கப்படக் கருவி வகை.
megascopic
a. இயல்பாவவே தௌிவாகத் தெரிகிற, எத்தகைய கண்ணாடியின் உதவியுமில்லாமல் பார்க்கக்கூடிய.
megaton,
n. பத்திரலக்கம் டன் எடை.
megawatt
n. 1000 'கிலோவாட்' மின்கூறு.
megger
n. மின் தடைகாப்பின் தடையாற்றல்மானி.
megilp
n. வண்ணந் தேய்க்கிற கலவை எண்ணெய்வகை, ஆளிவிதை எண்ணெய்-கற்பூரத் தைலக் கலவை.
megohm
n. பத்து நுழறாயிரம் மின் தடையாற்றல் அலகு.
megrim
-1 n. ஒற்றைத் தலைவலி, திடீரெண்ணம், விந்தைக் கருத்து, போலிப்புனைவு, ஆதாரமில்லாத நம்பிக்கை.
megrims
n. pl. எழுச்சியின்மை, மனச்சோர்வு நிலை, வெறி எண்ணம் அச்சந் தருகிற மனநோய் வகை, குதிரைக் கிறுகிறுப்பு நோய்.