English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
leggy
a. சிறுவன்-குதிரைக்குட்டி-நாய்க்குட்டி ஆகியவற்றின் வகையில் கம்பி போன்று நீண்டு ஒடுங்கிய கால்களையுடைய.
leghorn
n. தொப்பி முதலியவைகளில் வைக்கோலால் ஆனவரிப்பின்னல் வேலைப்பாடு, வீட்டுக்கோழி வகை.
legible
a. எழுத்து வகையில் தௌிவான, எளிதில் படிக்கக் கூடிய.
legion
n. படையணிப் பிரிவு, பண்டைய ரோமர் படையில் 3000 முதல் 6000 வீரர் வரைக் கொண்ட பிரிவு, பேரெண்ணிக்கை, பெருந்திரள், பெருங்கூட்டம்.
legionary
n. படையணிப்பிரிவினைச் சேர்ந்தவர், படைவீரர், (பெ.) படையணிப் பிரிவு சார்ந்த, படையணிப் பிரிவுகளுக்குரிய, படையணிப் பிரிவுகளை உட்கொண்ட, பெருந்திரளான, பேரெண்ணிக்கை உடைய.
legioned
a. (செய்.) படையணிப் பிரிவுகளாயுள்ள.
legislate
v. சட்டமியற்று.
legislation
n. சட்டமியற்றுதல், சட்டமியற்றுந் துறை, சட்டங்கள்.
legislative
n. சட்டமியற்றும் உரிமை ஆற்றல், சட்டம் இயற்றுங் குழுமம், (பெ.) சட்டமியற்றுகிற, சட்டங்களியியற்றும் உரிமை ஆற்றலுடைய, சட்டங்களியற்றுதல் சார்ந்த.
legislator
n. சட்டம்இயற்றுபவர், சட்டமன்ற உறுப்பினர்.
legislature
n. சட்டமன்றம், நாட்டின் சட்டமியற்றும் உரிமையுடைய குழுமம்.
legitimacy
n. முறைமை நிலை, சட்டப்படியான நிலை.
legitimatize
v. முறைமை உடையதாக்கு, சட்டத்துக்கு உடன்பாடானதாகச் செய்.
legitimism
n. (வர.) ஸ்பெயின் பிரான்சு நாடுகளில் மன்னர்குடியின் நேர்முக மரபுவழியை அடிப்படையாகக் கொண்ட உரிமைவாய்ந்தவர் மாட்டுப் பற்றுறுதியுடைவராக இருத்தல்.
legitmate
n. சட்டப்படியான திருமண மூலமாகப் பிறந்த, முறைமை வாய்ந்த, நேரிய, சரியான, ஒழுங்கான, நேர் மாதிரியை ஒத்திருக்கிற, அரசுரிமை வகையில் மரபுரிமை வழாத, அளவை முறைமையில் ஏற்புடைய, (வினை) ஆணை மூலம் முறைமை உடையதாக்கு, சட்டமியற்றி நேர்மை வாய்ந்த தாக்கு, சான்று காட்டி ஏற்புடையதாக்கு, சரி என்று மெய்ப்பி, முறைமையானதென்று காட்டுவதற்கு உதவு.
legof-mutton
a. பொதுவாக ஆட்டிறைச்சிக் கால் வடிவம் உடைய.
legume, legumen
பயற்றின நெற்று, பயற்றங்காய், உணவாகப் பயன்படும் பயற்றினச் செடியின் பகுதி.
leguminous
a. பயற்றினஞ் சார்ந்த, பயற்றினம் போன்ற, பயற்றினத் தாவரக் குடும்பத்துக்குரிய.
leister
n. கவைமுனையுடைய மீனெறி வேல், (வினை) மீன் வேட்டையில் கவைமுள் வேலால் எறி.