English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
isometric, isometrical
a. சமமட்டுடைய, ஒரேசீரான அளவுள்ள.
isomorphism
n. இசை மணியுரப்பான்மை, ஒரேவகையான அல்லது நெருங்கிய தொடர்புடைய வடிவியல் உருவங்களாகக் மணிவுருக்கொள்ளும் இயல்பு.
isomorphous
a. இசைமணியுரப்பான்மையுடைய, ஒரே வகையான அல்லது நெருங்கிய தொடர்புடைய வடிவியல் உருவங்களான மணிவுருக்கொள்ளுகிற.
isoniazid., isoniazide
n. எலும்புருக்கி நோயிற் பயன்படுத்தப்படும் மருந்துச் சரக்கு வகை.
isonomy
n. சரிசம அரசியல் உரிமை நிலை.
isoperimetrical
a. (வடி) சரிசமச் சுற்றளவுள்ள.
isopod
n. (வில) உடலின் இடைக்கண்டத்தில் ஏழு சரிசமமான இணைக்கால்களையுடைய மேலோட்டுயிர் வகை.
isosceles
a. (வடி) முக்கோண வகையில் இருசமபக்கங்களையுடைய.
isoseismal
a. நிலநடுக்க வகையில் ஒரேசீரான செறிவுள்ள அதிர்ச்சி இடங்களை இணைக்கிற.
isoteherm
n. சமவெப்பநிலைக் கோடு, ஒரே சீரான சராசரி ஆண்டு வெப்பநிலையுடைய இடங்களை இககிற.
isotheral
n. சரிசமக் கோடை வெப்பநிலைக்கோடு, ஒரே சீரான சராசரிக்கோடைகால வெப்பநிலையுடைய இடங்களை இணைக்கும் கோடு, (பெயரடை) ஒரேசீரான சராசரி கோடைகால வெப்பநிலையுடைய இடங்களை இணைக்கிற.
isotone
n. கருவுட்பகுதியில் நொதுமங்களை ஒரே எண்ணாக உடைய அணு,.
isotope
n. (வேதி., இய) ஓரகத்தனிமம் ஒரேபொருண்மையுடன் எடைமட்டும் வேறுபாடுடைய தனிமவகை.
isotopic number
n. அணுவின் கருவுளில் நேர்மங்களைவிட நொதுமங்களின் மிகைபாட்டெண்.
isotron
n. மின் கோட்டத்தால் ஓரகத்தனிமங்களை வேறு வேறு பிரிக்கும் முறை.
isotype
n. புள்ளி விவரப்பட விளக்கம்.
israeili
n. இஸ்ரேல் நாட்டினர், (பெயரடை) இஸ்ரேல் நாடு சார்ந்த.
Israel
n. இஸ்ரேல் நாடு, 1ஹீ4க்ஷ் மேத்திங்களில் பாலஸ்தீனத்தில் நிறுவப்பட்ட யூதர்நாடு, யூத இனம், கடவுளுக்கு விருப்பமான மக்கட்பிரிவு, (பெயரடை) இஸ்ரேல் நாட்டுக்குரிய.
Israelite
n. யாக்கோபின் வழிவந்தவர், யூதர், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ஒருவர், யூதர் சட்டத்தைக் கடைப்பிடிக்கும் கிறித்தவ சமயப்பிரிவினர்.
issue
n. வெளிப்போக்கு, புறங்கசிவு, குருதிக்கசிவு, குருதிக்கசிவுக்கான துளையீடு, போக்கிடம்,. செல்வழி, பத்திரிகை-புத்தகம்-அஞ்சல்தலை-பொருளாக முறி முதலியவற்றின் வெளியீடு,. பதிப்பு, ஒரு வெளியீட்டுத தொ,கதி, வழங்கீடு, பரப்பீடு, ஆணை, முதலியவற்றின் பிறப்பிப்பு, பலன், செயல் முடிவு, விளைபயன், சந்தானம், கான்முளை, வழித்தோன்றல், இடைபாடு, வழக்காடும் இருதிறத்தார்க்கும் இடைப்பட்ட பொருள், வாதச்செய்தி, வாத அடிப்படை, ஆய்வு அடிப்படை, வாத முடிவு, ஆய்வு விளைவு, நடைமுறை, செயல்முறை, செயற்கையாக எழுப்பப்படும் பொக்குளம், (வினை) வெளியிடு,. பரப்பு, அனுப்பு, ஆணை முதலியவற்றைப் பிற்ப்பி, புறஞ்செயல், கசிவுறு, வினைவுறு, விளைவுறு, உண்டாகு, எழு, வெளிப்படு, வெளியிடப்பெறு, பரவு, பரவுதலுறு, முடிவுறு, (சட்) முக்கிய செய்தியை அணுகிச்செல், படைத்துறையில் படைக்கலங்கள் வழங்கு.