English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
interlocution
n. உரையாடல், வாதம்.
interlocutor
n. உரையாடலிற் பங்குகொண்டு பேசுபவர், நீகிரோ இசைக்குழுவின் மேரலாளர், (சட்) தற்காலிக முன்னுத்தரவு.
interlocutory
a. நீதிமன்ற வழக்கு விசாரணையின் இடையிற் கூறப்பட்ட.
interloper
n. தலையிடுபவர், தன் ஆதாயம் கருதிப் பிறர் காரியங்களில் தலையிட்டுத் தொல்லை கொடுப்பவர், (வர) உரிமையற்ற வணிகர்.
interlude
n. இடைக்காட்சி, முற்காலத் தொடர்நாடகங்களின் இடைப்பட்ட சிறு நாடகக்காட்சி, முற்பட்டகால நாடக வகை, நாடகக் காட்சிகளிடையேயுள்ள இடைவேளை, இடைவேளை நிகழ்ச்சி, இடைமாற்று நிகழ்ச்சி, இடைக்காட்சி இசை, (இசை) பாட்டிடைக் கருவி இசைப்பு.
intermarriage
n. மண இணைப்புறவு, குடும்பம், -குலம்-சாதி-உறவுக்குழு ஆகியவற்றிடையே நிகழும் கலப்புமணம்.
intermarry
v. மண இணைப்புறவுகொள், குடும்பம்-குலம் -நாடு முதலிய குழுக்களின் வகையிற் பிற குழுவிலிருந்து கலப்புமண உறவுகொள்.
intermeddle
v. தகாநிலைத் தலையீடுகொள், வேண்டாதவற்றில் தலையிடு.
intermediary
n. இடையீட்டாளர், நடுவர், சந்து செய்விப்பவர், (பெயரடை) இடையீட்டாளராயச் செயலாற்றுகிற, சந்து செய்விக்கிற, இடைநிலையான.
intermediate
n. இடைவருபொருள், இடைப்பட்டபொருள், நடுத்தரமான பொருள், (பெயரடை) இடைவந்த, இடைப்பட்ட, நடுத்தரமான, இடையீடான, இடையிலள்ள, (வினை) இடைநின்று செயலாற்று, சந்து செய்வி.
intermedium
n. இடைப்பட்டபொருள், இடைநிலைப் பொருள், ஊடுபொருள், விண்புறவெளியில் ஆற்றல் கடக்கவிடும் ஊடுபொருள்.
interment
n. புதைத்தல், புதைவினை.
intermezzo
n. நாடகத்தின் இடையேவரும் சிறுதிற இடைக்காட்சி, பெரிய இசை நிகழ்ச்சித தொகுப்பை இணைக்கிற சிறு மெல்லிசை நிகழ்ச்சி.
intermigration
n. குடிபெயர்ச்சிப் பரிமாற்றம்,. குடிபெயர்வு மாற்றிக்கொள்ளுதல்.
interminable
a. முடிவுறாத, சலிப்பூட்டுகிற, களைப்பூட்டுகிற, அளவுக்கு நீண்ட.
intermingle
v. ஒன்றுடன் ஒன்று சேர், இருபொருள்களைச் சேர்த்துக் கல., இணைந்து கல.
intermission
n. ஓய்வு, இடை நிறுத்தம், நாடக இடைவேளை, நாடக இடைவேளைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடற் பகுதிகள்.
intermit
v. நிறுத்திவை, இடைநிறுத்து, தொடர்புறு, காய்ச்சல்-நோவு-நாடி ஓட்டம் ஆகியவற்றின் வகையில் சிறிது இடையே ஓய்வுறு.
intermix
v. ஒன்றாகக் கலப்புறு, ஒன்றோடொன்று கல, இணைந்து கல.
intern
-1 n. கல்விநிலைய இல்லத்தின் உள்ளுறைவாளர், மருத்துவமனை உள்ளுறை மருத்துவர், முதிர்மாணவ மருத்துவர், மாணவத் ச்சி முதிர்ந்து அல்லது பட்டம் பெற்று மருத்துவ மனையில் தங்கித் துணைமருத்துவராகச் செயலாற்றுபவர்.