English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
indigestion
n. உணவுச்செரிமானமின்மை, வயிற்றுமந்தம், மப்புநோய், உணவு செரியாநிலை, ஏற்றமையாநிலை, புறப்பண்புகளையோ கருத்துக்களையோ ஏற்றுத் தன்வயப்படுத்திக் கொள்ளமுடியாமை.
indigestive
a. வயிற்றுமந்தம் உண்டுபண்ணுகிற, மப்பு நோய்ப்பட்ட.
indignant
a. சீற்றங்கொண்ட, கடுஞ்சின வெறுப்புடைய.
indignation
n. நேர்மையான சீற்றம், ஏளனக்கோபம், கடுஞ்சினம், கோபத்தின் விளைவான நிலை, கோப உணர்ச்சி, உளக்கொதிப்பு.
indignation-meeting
n. பொதுமக்கள். கடுஞ்சினத்தைத் தெரிவிக்கும் பொதுக்கூட்டம்.
indignity
n. அவமதிப்பு, தகாதமுறையில் நடத்துகை, ஏளனப்பழிப்பு.
indigo
n. நீலச்சாயம், அவுரிச்செடி.
indigo-brid
n. வட அமெரிக்க கருநீலநிறப் பாடும் பறவை வகை.
indirect
a. சுற்றுமுகமான, எதிர்முகமல்லாத, சுற்றி வளைத்துச் செல்கிற, நேரடியல்லாத, நேர்வழியல்லாப் பிறிது வழியான, பிறிதூடு செல்கிற.,,சுற்றிவளைத்துக் கூறுகிற, மறைமுகமான, குறிப்பாகத் தெரிவிக்கிற, நேராக அமையாத, பிறிதூடாகத் தாக்குகிற, (இலக்) தன்மொழிக்கூற்றாயமையாத, பிறிதுமொழிக் கூற்றான.
indirection
n. சுற்றுவளைவான முறைகள், நேர்மையற்ற வழிகள், ஏமாற்றம், மோசடி, சூழ்ச்சி.
indis,crete
பகுதிகளாகப் பிரிக்கப்பட முடியாத, பிரித்துணரப்படாத., தனி முழுமையான.
indiscernible
n. வகைதிரிபறிந்துகொள்ள முடியாத பொருள், ஒன்றிலிருந்து மற்றொன்றைத் தௌிவாகப் பிரித்துத் தெரிந்துகொள்ள முடியாத பொருள், ( பெயரடை) வேறு பிரித்தறிய முடியாத, வகுத்துணர இயலாத, திரித்து அறிய முடியாத.
indiscerptible
a. கூறுகூறாகப் பிளந்தாலும் தன்மையழியாத, பகுதிபகுதியாகப் பிரித்தழித்துவிட முடியாத.
indisciplne
n. கட்டுப்பாடின்மை, ஒழுங்கின்மை.
indiscreet
a. வகைதிரிபற்ற, கூரிய, தேர்வறிவற்ற, தகவறியாத.
indiscretion
n. மடமை வழு, ஆராயாத செயல், அனுபவ அறிவற்ற தவறு, பணிமனைக் கடமைகளில் அறியாப் பிழைபாடு, அறியதாப்பிழைச்சாக்குடன் செய்யப்படட்ட கடமை தவறுதல்.
indiscriminate
a. வகைதொகையற்ற, திரித்துணர்வில்லாத, குழப்பநிலைப்பட்ட, கும்புகூளமான, தாறுமாறாகச் செயல்படுகிற, பாகுபாடற்ற.
indispensable
a. இன்றியமையாத, தவிர்க்க முடியாத, இல்லாமல் முடியாத.
indispose
v. நலிவி, உடல்நலங்கெடு, உவர்ப்புத்தூண்டு, மனச்சார்பு கெடு, இயலாமற் செய், வாய்ப்புநலங் கெடு, தகுதியற்றதாக்கு.,
indisposition
n. உடல்நலமின்மை, நோய்நிலை, உளநலமின்மை, விருப்பமின்மை, உவர்ப்புநிலை.