English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Indian
n. இந்தியர், பாரத தேசத்தவர், பாரத தேசத்திடின் குடியுரிமையாளர், அமெரிக்காவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் உரிய பழங்குடிமக்கள், இந்தியாவில் முன்பு நீடித்து வாழ்ந்த ஆங்கிலேயர், (பெயரடை) இந்தியாவுக்குரிய, இந்தியருக்குரிய, அமெரிக்க மேற்கிந்தியத் தீவுகளின் பழங்குடி மக்களுக்குரிய.
indianization
n. (வர) இந்திய மயமாக்குதல், இந்தியாவில் பணித்துறை இடங்களை நாட்டு மக்களையே கொண்டு நிரப்பும் முறை.
Indiarubber, india-rubber
n. ரப்பர், மரப்பால் உறைவிலிருந்து எடுக்கப்படும் தொய்வகத்துண்டு.
indicate
n. சுட்டிக்காட்டு, தெரிவி, விளக்கிக்காட்டு, சுருக்கமாகக் கூறு, (மரு) குறிப்பாகத் தெரிவி, அறிகுறிகாட்டு, அறிகுறியாயிரு, அடையாளப்படுத்திக் தெரிவி.
indicative
n. (இலக்) தெரிநிலைவினை, (பெயரடை)சுட்டிக்காட்டுகிற, குறிப்பாகத் தெரிவிக்கிற, (இலக்) தெரிநிலையான, வினைச்சொல் வகையில் நிகழ் செய்தியை எடுத்துக்கூறுகிற.
indicator
n. சுட்டிக்காட்டுபவர், பொருளளவு விசைவேகம் தொலை முதலியவற்றினைப் பதிவுசெய்து சுட்டிக் காட்டும் கருவி.
indicium
n. அடையாளம், அறிகுறி.
indict
v. சட்டமுறைப்படி குற்றஞ் சாட்டு, குற்றப்பதிவு செய், குற்றப்பதிவறிவி.
indictable
a. செயல்வகையில் வழக்குத் தொடர்வதற்குரிய, ஆள்வகையில் குற்றம் சுமத்தப்படக்கூடிய.
indiction
n. அரசியல் ஆணைவிளம்பரம், மன்னர் கட்டளை அறிவிப்பு, (வர) பண்டை ரோமாபுரிப் பேரரசர் கான்ஸ் டண்டைன் கி.பி. 312 செப்டம்பர் முதல் நாள் முதல் கணக்கிட்டு நிறுவிய 15 ஆண்டுகளடங்கிய வரித்துறைக் காலரப்பிரிவு, வரித்துறைக் காலப்பிரிவுக்குரிய வரி.
indictment
n. முறையார்ந்த குற்றச்சாட்டு, குற்றச்சாட்டுப் பத்திரம், முறைப்பேராயம் குற்றச்சாட்டினைப்பெற்று மீட்டளிக்கும் சட்டமுறைமை.
Indies, East Indies
n. pl. இந்தியாவுக்கும் சீனாவுக்கும இடைப்பட்ட மாநிலமும் அதற்கப்பாலுள்ள தீவுகளும் இந்தியாவும் சேர்ந்த பரப்பு.
indifference, indifferency
n. கவனமின்மை, கருத்தின்மை, விருப்புவெறுப்பின்மை, அக்கறையின்மை, மெத்தனம், வேண்டாவெறுப்பு, புறக்கணிப்பு, அசட்டை மனப்பான்மை, நொதுமல்நிலை, பட்டுப்படாநிலை, எழுச்சியற்ற தன்மை, இரண்டுங்கெட்டநிலை, இடைப்படுநிலை.
indifferentism
n. சமயத்துறையில் பட்டுப்படா மனப்பான்மை, சமய ஒப்புரவு நிலை.
indiffrent
n. நடுநிலையாளர், சமயத்துறைத்தனிச்சார் பில்லாதவர், அரசியல்துறை நடுநிலையினர், (பெயரடை) நடுநிலையான, சார்வெதிர்வற்ற, கவலையற்ற, கருத்தற்ற, விருப்புவெறுப்புபற்ற, நல்லதுகெட்டது, அற்ற, சிறிது மோசமான, நடுத்தரமான, இடைநிலைப்பட்ட, முக்கியத்துவமற்ற, இடைநிலையான, வேதியியல் காந்த மின்துறைகளில் இருதிறச்செயல் விளைவுகளுமற்ற.
indigence, indigency
நல்குரவு, கழிபெரு வறுமை.
indigene
n. நிலத்துக்குரிய தொன்முதற்குடியான, நாட்டுப் பழங்குடி சார்ந்த, திணைநிலைக்குரிய, திணைத்தோன்றல்.
indigenous
a. நிலத்துக்குரிய தொன்முதற்குடியான, நாட்டுப் பழங்குடி சார்ந்த, திணைநிலைக்குரிய, திணைத் தோன்றலான.
indigent
a. ஏழ்மையான, வறுமைப்பட்ட, நல்கூர்ந்த.
indigestible
a. செரிக்கவைக்க முடியாத சீரணிக்க முடியாத.