English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
incubate
v. அடைகாக்கும்படி முட்டை மேலமர், குஞ்சு பொரி, நினைவில் ஆழ்ந்திரு, நினைந்து நினைந்து உருகு.
incubation
n. அடைகாத்தல், அடைகாப்பு, குஞ்சுபொரிப்பு, அடைகாப்பு முறை, வேண்டுதல் நோன்புத்துயில், தெய்வங்களிடம் கனவு மூலமான அருள்வேண்டிப் புனிதத்திருவிடத்தில் துயிலுதல், தன்னைமறந்த ஆழ்நினைவு, தற்சிந்தனை, தூய ஆவியின் தற்சிந்தனை நிலை, ஆழ்ந்த திட்ட ஆய்வாராய்வு, (மரு) நோய் நுண்மப்பெருக்க நிலை, நோய்க்குறிகள் தோன்றுமுன் நுண்மங்கள் ஆக்கம் பெறும் நிலை.
incubator
n. அடைகாப்புக்கருவி, செயற்கை முறையில் குஞ்சு பொரிக்க முட்டைகளை அடைகாக்கும் கருவி, கருமுதிர்ச்சிக்கருவி, முழுவளர்ச்சியுறாது காலத்திற்கு முன்பே பிறந்த குழந்தைகளவளர்க்கும் அமைவு, (மரு) மருத்துவ முறைகட்கான நோய்நுண்மப்பெருக்க அமைவு.
incubus
n. பேய்க்கனா, தீக்கனவு, கனவில்வந்து கிலியூட்டுவதாகக் கருதப்படும் கொடிய பேயுருவ ஆவி, அச்சுறுத்திக் கொடுமைப்படுத்துபவர், அச்சுறுத்திக் கொடுமைப்படுத்தும் பொருள், கிலியூட்டும் செய்தி.
inculcate
v. மனத்தில் ஆழப்பதியவை, வற்புறுத்திப் பயிற்று, மீண்டும் மீண்டும் முயன்று படியவை, பயிற்றுவித்துப் பழக்கு.
inculpate
v. குற்றஞ் சாட்டு, குறைகூறு, குற்றச்சாட்டில் சிக்கவை.
incumbency
n. திருக்கோயில் மானியம், மானியம் வகிப்பவர் பதவி, மானியம் வகிப்பவர் ஆட்சியுரிமை, மானியம், வகிப்பவர், ஆட்சியுரிமை எல்லை, பணி வகிப்பு, கடமை, பொறுப்பு, சார்பு, சர்புநிலை, மேலார்வு, மேற்கவிவு,.
incumbent
-1 n. திருக்கோயில் மானியம் வகிப்பவர், பதவி வகிப்பவர்.
incunabula
n. pl. ஒன்றன் தொடக்க நிலைகள், 1501-ஆம் ஆண்டிற்கு முன் அச்சிடப்பட்ட நுல்கள்.
incur
v. வருவித்துக்கொள், ஆட்படு, உள்ளாகு.
incurable
n. தீராப் பிணியாளர்., குணப்படுத்த முடியாத நோயாளி, (பெயரடை) குணப்படுத்த முடியாத, திருத்த முடியாத.
incurious
a. ஆவலற்ற, அறிவார்வமற்ற, அவாத்தூண்டுதலற்ற, அக்கறையற்ற, கவலைகொள்ளாத, கவர்ச்சி தராத,. சிறப்பற்ற.
incursion
n. உள்ளேறித் தாக்குதல், திடீர்த் தண்டெழுச்சி, அடுத்தடுத்து தாக்குதல் முயற்சி.
incurve
v. வளைவாக்கு, உள்நோக்கி வளையும்படி செய்.
incus
n. சுத்தி எலும்பிலிருந்து ஒலியலை அதிர்வுகளை வாங்கும் காதெலும்பு.
incuse
n. நாணயத்தின்மீது பொறிக்கப்பட்ட முத்திரை உரு, (பெயரடை) பொறிக்கப்பட்ட, முத்திரையடிக்கப்பட்ட, (வினை) முத்திரையடித்து உருப் பதியவை, உருப் பொறிப்பிடு,. உருவங்களால் நாணயங்களுக்குக் குறியிடு.
indaba
n. தென்னாப்பிரிக்க பழங்குடியினரிடையே நடைபெறும் கலப்பாய்வுக் கூட்டம், தென்னாப்பிரிக்க பழங்குடியினருடன் நடைபெறும் மாநாடு.
indebted
a. கடன்பட்டுள்ள, கடனாளியாயுள்ள, நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ள, கடப்பாடுடைய.
indecent
a. நாணமில்லாத, நடை நயமற்ற, மரியாதையற்ற, கேவலமான, இழிவான, தகுதியற்ற, அருவருப்பான.