English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
impatient
a. பொறுமையற்ற, பதற்றமான, மன அமைதியற்ற, சகிகப்புத்தன்மையற்ற, ஆத்திரமான, அமைதியற்ற தன்மையில் ஆர்வமுற்ற.
impawn
v. அடகுவை, ஈடாகவை, உறுதிக்காப்பாக அளி,.
impayable
a. விலைமதிப்பற்ற.
impeach
v. உச்சஉயர் பேரவை மன்றத்தில் நிறுத்தி அரசுப்பகைமைக் குற்றஞ்சமாட்டு, பேரவைப்பொதுமன்றத்தின் சார்பாக உயர்மன்றத்தில் அரசயில் உயர்பணியாளர்மீது குற்றஞ் சாட்டு, மன்றச்சான்றாகி உடன்குற்றவாளி மீது குற்றம தாக்கு, குறைகாண், இழித்துரை, மதிப்புக்குறைப்படுத்து.
impeachable
a. குற்றத்துக்கிடமான, குறைகாணத்தக்க.
impeachment
n. மன்பகைக் குற்றச்சாட்டு, அரசியல் குற்றச்சாட்டு, பழிப்பெதிர்ப்பு, குற்றத்தாக்குதல்.
impeccable
a. பழிக்கிடந்தராத, மாசற்ற, குற்றமில்லாத, குறையற்ற.
impecunious
a. கையில் பணமில்லாத, பணமுடைப்பட்ட.
impedance,
nl. (மின்) மாற்று மின்னோட்டத்துக்கு ஏற்படும் புறத்தோற்றத்தடை.
impede
v. தடைசெய், முட்டுக்கட்டையிடு, தாமத்ப்படுத்து.
impediment
n. தடை, இடர்ப்பாடு, குறை.
impel
v. உந்துவி, முன்னேறச்செய், தூண்டு, இயக்கு, செலுத்து, ஓட்டு, கட்டாயப்படுத்திச் செய்வி.
impend
v. தொங்கு, ஊசலாடு, அச்சுறுத்தும் நிலையில் இரு, எக்கணமும் நிகழஇரு, வரஇரு, நடைபெற இரு.
impenetrable
a. ஊடுருவிச்செல்ல இடந்தராத, துளைக்க முடியாத, அறிய முடியாத, ஆழங்காண முடியாத., கருத்தேற்கும் இயல்பற்ற, முட்டாளான, (மெய்) இட இயல்பு வகையில் ஒருங்கு இருபொருள் புவகுத்திடப்பெறமுடியாத.
impenetrate
v. ஆழ்ந்து ஊடுருவு, நுழை, உற்றறி.
impenitent
a. பிழைக்கிரங்காதம, கழிவிரக்கமற்ற, தீமையிலர் தோய்ந்து கல்மனப்பட்ட.
imperative
n. (இலக்) வினையின் ஏவல்படிவம், (பெயரடை) கட்டளையிடுகிற, அதிகாரமான, அவசரமான, தவிர்க்க முடியாத, (இலக்) ஏவலைக் குறிக்கிற.
imperator
n. (வர) பண்டை ரோமாபுரியில் தளபதி, வெற்றியுடன் திரும்பும் படைத்தலைவர், சக்கரவர்த்தி, பேரரசர்.
imperceptible
n. புலப்படா நுண்பொருள், (பெயரடை) புலனால் அறியப்படமுடியாத, உணரமுடியாத, காணப்பட முடியாத, புலப்படாத, சிறு அளவான, மிக நுட்பமான, நுண்ணியலான.
impercipient
a. புலனறிவிற் குறைபாடுடைய.