English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
hylic
a. பருப்பொருளுக்குரிய, பருப்பொருளியல்புடைய, பிழம்பு நிலையான.
hylomorphism
n. இயன்மூலவாதம், பருப்பொருள் மூலநிலையே இயலுலகின் மூலமுதல் என்னும் கோட்பாடு.
hylotheism
n. இயலிறை ஒருமை வாதம், இயற்பொருளும் இறையும் வேறல்ல என்ற கோட்பாடுடையவர்.
hylotheist
n. இயலிறை ஒருமை வாதி, இயற்பொருளும் இறையும் வேறல்ல என்ற கோட்பாடு.
hylothesistic
a. இயலிறை ஒருமை வாதம் சார்ந்த, இயற்பொருளும் உயிரும் வேறல்ல என்னும் கோட்பாடுடைய.
hylozoism
n. இயல் உயிர்வாதம், இயற்பொருளும் உயிரும் வேறல்ல என்ற கோட்பாடு.
hylozoist
n. இயல் உயிர்வாதி, இயற்பொருளும் உயிரும் வேறல்ல என்னும் கோட்பாடுடையவர்.
hylozoistic
a. இயல் உயிர்வாதம் சார்ந்த, இயற்பொருளும் உயிரும் வேறல்ல என்னும் கோட்பாடுடைய.
Hymen
-1 n. கிரேக்கபுராண மரபில் திருமணத் தெய்வம்.
hymeneal
n. திருமணப்பாட்டு, (பெ.) திருமணஞ் சார்ந்த.
Hymenoptera
n. pl. ஒளியூடுருவும் மென்தாள்போன்ற நான்கு சிறகுகளையுடைய புழுப்பூச்சினப் பிரிவு.
hymenopteral, hymenopterous
a. புழுப்பூச்சியினத்தில் நான்கு சவ்வுச் சிறகுகளை உடைய.
hymn
n. பாசுரம், இறைவன் புகழ்ப்பாடல், தேவாரம், (வி.) பாசுரங்களால் இறைவன் புகழ்பாடு, பாடிப் பூசனை செய், பாட்டால் புகழ்நிறுவு, பாட்டில் தெரிவி.
hymnal
n. பாசுர ஏடு, இறைவன் புகழ்ப்பாடல் தொகுதி, (பெ.) பாசுரம் சார்ந்த, புகழ்பாடலின் இயல்புடைய.
hymnary
n. இறைவன் புகழ்பாசுர ஏடு.
hymnody
n. இறைவன் புகழ்பாசுரத் தொகுதி, பாசுரம் பாடுதல், பாசுரங்கள் இயற்றுதல்.
hymographer
n. பாசுரங்கள் இயற்றுபவர்.
hymology
n. பாசுரங்கள் இயற்றுதல், பாசுர ஆராய்ச்சி, பாசுரங்களின் தொகுதி.
hyoid
n. வளைந்த நாவடி எலும்பு, (பெ.) எலும்பு வகையில் நாவடி சார்ந்த.
hyoscine
n. நச்சுக்செடி வகையிலிருந்து எடுக்கப்பட்டு மருந்தாய் உதவும் காரப்பொருள்களில் ஒன்று.