English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
highflying
a. உயரப்பறக்கிற, உயர்பேராவலுடைய, மட்டுமீறிய உயர்அவாவுடைய.
Highlander
n. ஸ்காத்லாந்தின் வடமேட்டு நிலத்துக்கு உரியவர்.
highlands
n. pl. மேட்டுநிலம்.
highlight
n. முனைப்பான பகுதி, சிறப்புக்கூறு, (வி.) முனைப்பான ஒளியால் விளக்கமாகத் தெரியும்படி செய்.
highlights
n. pl. மிகு ஒளிபடும் இடங்கள், நன்கு புலப்படும் பகுதிகள்.
highly
adv. மிகுதியாக, உச்ச அளவாக, உச்ச உயர்படியில், உயர்வாக, உயர்விலையாக, உயர்மதிப்புடன், மிகஆதரவாக, மிகவும் சாதமாக, உயர்குடி மரபில்.
highness
-1 n. உயர்வு, மேம்பாடு, பதவிமதிப்பு.
hight
a. (செய்.) எனப் பெயரிய.
highway
n. அரசபாட்டை, பெருவழி, நெடுஞ்சாலை, நீர்நிலத் தலைமை நெறி, செயல்துறையில் நேர்வழி, பொதுமுறை நேர்பாதை.
highwayman
n. ஆறலைக்கள்வர், வழிப்பறிக்கொள்ளைக்காரர்.
hike
n. (பே-வ.) பயிற்சிக்கான நீள்வழிநடை, இன்ப உலா நடை, (வி.) நெடுவழி நட, காலுழைக்க நட, தங்குகூடாரச் சுமைகளைத் தோளில் தாங்கி நட.
hilam
n. (தாவ.) விதையின் தாளடித்தழும்பு, (உள்.) நாடிநரம்பு குழாய்கள் உறுப்பினுள் நுழையும் உள்வாய்ப் பள்ளம்.
hilarious
a. களிப்புடைய, பெருமகிழ்வான.
hilarity
n. உவகை, கழிமகிழ்வு.
Hilary, Hilary term
n. இங்கிலாந்துநாட்டு நீதிமன்ற ஆண்டிருக்கைக் காலத்தொடக்கம், பல்கலைக்கழக ஆண்டிருக்கைத் தொடக்கம்.
hill
n. குன்று, சிறுமலை, பொற்றை, மேடு, புற்று, குவியல், (வி.) குன்று போல உருவாக்கு, செடிக்கு மண்ணணைப்பிடு.
hillo, hilloa
தொலைவிளிப்புக் குறிப்பு, சந்திப்பு வியப்புக் குறிப்பு.
hillock
n. பொற்றை, சிறுகுன்று, மேடு.
hilly,
a. குன்று நிரம்பிய, குன்றார்ந்த.
hilt
n. வாள் முதலிய கருவிகளின் கைப்பிடி, (வி.) கைப்பிடி அமை.