English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Go to page
செல்லும்பக்கம்
go-ahead
n. மேல் தொடர்வதற்கான இசைவு, (பெ.) துணிவான முயற்சியுள்ள.
go-as-you-please
a. பட்டுப்பாடில்லாமல் செல்லத்தக்க
go-by
n. கடத்தல், கடப்பு.
go-getter
n. (பே-வ.) விடாக்கண்டன், தன்முனைப்புக்காரர்.
go-to-meeting
a. தொப்பி ஆடை முதலிய வற்றின் வகையில் திருக்கோயிலுக்குச் செல்வதற்குத் தகுதியான.
goad
n. தாற்றுக்கோல், துன்புறுத்தும் பொருள், தூண்டுதல் அளிக்கும் பொருள், (வினை) தாற்றுக்கோல்கொண்டு குத்து, எரிச்சலுட்டு, தொல்லை தந்து தூண்டுதலளி.
goadsman, goadster
தாற்றுக்கோலால் விரைவுபடுத்துபவர்.
goal
n. இலக்கு, குறிக்கோள், முயற்சி நோக்கம், உயர்அவா நோக்கம், பயண எல்லை, பந்தய முடிவெல்லை, ஆட்ட இலக்குக்குறியிடம், பந்தாட்டத்தில் பந்தைக் குறியிடம்பட அடித்த கெலிப்பெண், பண்டை ரோமபுரியில் தேரோட்டப்பந்தயத்தில் திரும்புகட்டக் கம்பம்.
goal-line
n. பந்தாட்டக் குறியிலக்குக் கள எல்லை.
goal-posts
n. பந்தாட்டக் குறியிலக்குக் கம்பங்கள்.
goalkeeper
n. இலக்குக் காவலர், பந்தாட்ட இலக்குக் குறியிடப் பாதுகாப்பாளர்.
goat
n. வெள்ளாடு, தகர்மனை, மேடராசி, ஒழுக்க வரம்பற்றவர்.
goat-fig
n. காட்டுஅத்தி வகை, காட்டு அத்திப்பழம்,
goat-fish
n. நீளுருளை வடிவான சுவைமிக்க மீன்வகை.
goat-god
n. கிரேக்க நாட்டு இயற்கைத் தெய்வம்.
goatbeard
n. புல்வெளிகளில் வளரும் ரோசாக் குடும்ப மலர்ச்செடிவகை.
goatee
n. வெள்ளாட்டின் தாடி.
goatherd
n. வெள்ளாடு மேய்ப்பவர்.