English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
globule
n. சிறுகோளம், உருண்டைத்துகள், துளி, மாத்திரை, குளிகை.
globulin
n. உப்புநீரில் கரையும் இயல்புடன் உயிரினத்தசைக்கூறுகளில் காணப்படும் புரத வகை.
globulite
n. பாறை வகைகளில் காணப்படும் மிகநுண்ணிய உருப்பளிங்கக் கோளம்.
glochidiate
a. (தாவ.) நுனியில் சுணையுடைய, முனையில் ஈட்டி முனைபோன்ற கூறுடைய.
glockenspiel
n. மொத்துச்சலாகை இசைக்கருவி, சம்மட்டியால் அடித்து மிழற்றப்படும் உலோகக் கட்டைகளையுடைய இசைக்கருவி வகை.
glomerate
a. (தாவ., உள்.) நெருக்குக் கொத்துக்களாயுள்ள, (வினை) திரட்டு, உருட்டு.
glomerule
n. (தாவ.) சிதல் விதைகள் கொண்டசிறு உருண்டை, குறுங்காம்புள்ள பூங்கொத்து, சிற்றுயிர்களின் திரள் மொத்தை வடிவம், நாடி நரம்புகளின் திரள்முடி, தசைக் கூறுகளின் இணைக்குச்சம்.
gloom
n. இருள், தௌிவற்ற நிலை, மனச்சோர்வு, முகவாட்டம், கையறவு, (வினை) முகவாட்டமாயிரு, சீறிய தோற்றங்கொள், (வானிலை) மப்புமந்தாரமாயிரு, குமுறாலாயிரு, அச்சுறுத்துவதாயிரு, இருண்டு தோன்று, இருளடைந்திரு, தௌிவற்றதாயிரு, இருள்பரப்பு, துயர் பரப்பு,
gloomy
a. இருண்ட, வெளிச்சமில்லாத, சோர்ந்த தோற்றமுடைய, சிடுசிடுப்பான, துயருற்ற, மனச்சோர்வு தருகிற.
gloria
n. (ல.) இறை புகழ்ப்பாடல், தலைசூழ் ஒளிவட்டம்.
glorifiication
n. மேன்மைப்படுத்துதல், இறைபுகழ்ப்பாட்டு, இறைபுகழ்ப்பாடல் தொகுதி.
glorify
v. பெருமைப்படுத்து, புகழொளி சார்த்து, வானளாவப் புகழ், அருஞ்சிறப்பேற்று, எளிய பொருளுக்குக் கவர்ச்சியூட்டு, புகழ்பாடிய போற்று.
gloriole
n. மிகுபுகழ், தலைசூழ் ஒளிவட்டம்.
glorious
a. புகழ்பெற்ற, மேன்மை பொருந்திய, கீர்த்தி வாய்ந்த, மிகுபுகழ் தருகிற, மதிப்பு வாய்ந்த, சிறந்த, பெருந்தக்க, பேருவப்புத் தருகிற.
glory
n. புகழ், சீர்த்தி, பெருஞ்சிறப்பு, பெருமைப்படுவதற்குரிய செய்தி, பெருமைக்குரிய செய்தி, புகழ் வழிபாடு, நன்றியறிவிப்பு வழிபாடு, செயற் பெருவெற்றி, செயல் வழிபாடு முகடு, வெற்றிவீறு, வள நிறைவு, பெருமிதச் செய்தி, பேரணிகலம், பேரொளி, கதிரொளிப் பிறக்கம், நிலா வட்டம், வானவில் வட்டம், முகிலொளி வட்டம், புகழ்ஒளி, சூழொளி வட்டம், இறை ஒளிமாட்சி, வானுலக மாட்சி, பேரெழில், தனிப்பேருயர்வு, பேரின்பம், நிலவுலகு காணாக் கற்பனைப் பேரழகு, (வினை) பெருமைகொள், மகிழ்ந்தாடு.
gloss
-1 n. மேல் மினுக்கு, மாயத் தோற்றம், அழகிய புற வடிவம், (வினை) மேற்புறத்தைப் பளபளப்பாக்கு, போலிப் புறத்தோற்றம் கொடு, கவர்ச்சி மிகுத்துக் காட்டு, தீங்கு குறைத்துக் காட்டு.
glossal
a. (உள்.) நாவுக்குரிய.
glossarial
a. அரும்பதவுரை சார்ந்த, அரும்பதவுரையின் உருவான, விளக்கம் அடங்கிய.
glossarist
n. விளக்கவுரை வரைபவர்.
glossary
n. அரும்பதவுரைத் தொகுதி, அருஞ்சொல் விளக்கக் கோவை, விளக்கத் திரட்டு, தனித்துறைச் சொல் விளக்கக் களஞ்சியம், திரிசொல் விளக்கத் தொகுதி, திசைச்சொல் விளக்கக் களஞ்சியம்.