English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
gingerbread
n. இஞ்சியப்பம், இஞ்சியினால் சுவையும் மணமும் ஊட்டப்பெற்ற வெல்லப் பண்டம்.
gingerly
a. விழிப்புடன் மெல்லச் செல்கிற. (வினையடை) முன்னெச்சரிக்கையுடன், மெல்லமெல்ல.
gingerous
a. இஞ்சிபோன்ற, இஞ்சிச் சுவையொத்த.
gingham
n. வண்ண இழைகளால் கோடுகள் அல்லது கட்டங்களிட்டு நெய்யப்பட்ட பருத்தி அல்லது மென்சனல் துணி.
gingival
a. பல்லெயிறு சார்ந்த.
gingivitis
n. பல்லெயிற்று வீக்கம்.
ginglymus
n. (உள்.)இரு திசைகளில் மட்டும் இயங்கக் கூடிய கீல்மூட்டு.
ginner
n. பஞ்சினின்று பருத்திக் கொட்டைகளை நீக்குபவர்.
Ginning factory
பஞ்சாலை, பஞ்சுப் பிரிப்பகம்
ginpalace
n. இன்தேறற் பகட்டில்லம்.
ginsling
n. நல்மணத் தண் குடிவகை.
gipsy
n. நாடோடி இனவகை சார்ந்தவர், நாடோடி, சூழ்ச்சி மிகக் கயவர், குறும்புக்காரர், கருநிற உடலுடையவர், குறும்புக்காரப் பெண், கருநிறப் பெண், (பெ.) நாடோடி இனவகை சார்ந்த, மனைப் புறவாழ்வுப் பண்பு தோய்ந்த, சமுதாயக் கட்டுப்பாடற்ற, (வினை) நாடோடி இனவகையினர்போல மனைப்புற வெளிகளில் அல்லது கூடாரங்களில் தங்கி உண்டாடி வாழ்.
gipsywort
n. தோல் நிறம் மாற்றப் பயன்பட்ட செடிவகை.
giraffe
n. ஒட்டைச்சிவிங்கி.
girandole
n. சுழல் வாணம், சுழலம் சக்கரத்திலிருந்து வாணங்களை எறியும் வெடியமைவு, சுழலும் நீர்த்தாரை, மெழுகுதிரிக் கொத்துவிளக்கு, சிறுமணிக்கற்களால் சூழப்பட்ட பெரிய மணிக்கற் காதணி, பெரிய மணிக்கல்லைச் சூழச் சிறுமணிகளையுடைய தொங்கக்கூட்டம்.
girasol, girasole
சிவப்பு ஒளிகாலும் நீரகப்படிக்க மணிக்கல் வகை.
gird
-1 v. சுற்றிக்கட்டு, வரிந்து கட்டு, கச்சையினால் இறுக்கிக் கட்டு, சூழ், வளை, சுற்றியிரு, சூழ்எல்லையாய் அமை, அணி, பூட்டு, வலிமையும் ஆற்றலும் அளி, கச்சையில் வாள் செருகிக்கொள், கச்சையின் மேல் வாள் முதலியவற்றை வைத்துக்கட்டு.
girder
n. தூலம், தள ஆதாரமாக இடப்படும் பெரிய உத்தரம், தூலமாகப் பயன்படும் இரும்புப் பாளம், பாலங்களுக்கும் மோடுகளுக்கும் ஆதாரமான எஃகுக்கட்டுமானச் சட்டம்.