English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
gazette
n. செய்தித்திரட்டுத் தாள், அரசினர் செய்தியிதழ், பணித்துறை வெளியீடு, (வினை) பணித்துறைச் செய்தித்தாளில் வெளியிடு, அரசியல் செய்தியேட்டிற் பதிவுசெய்.
gazetteer
n. கருப்பொருட் களஞ்சியம், விவரத்தொகுப்புச் சுவடி, (வினை) கருப்பொருட் களஞ்சியத்தில் விரித்துரை.
gazing-stock
n. தூற்றப்படுபவர், தூற்றப்படும் பொருள்.
gazy
a. பரந்த காட்சிக்கு வாய்ப்பளிக்கிற, உற்றுப்பார்க்கும் இயல்புடைய.
Geaneva
-2 n. ஸ்விட்சர்லாந்து நாட்டுப் பெருநகரம், சர்வதேச சங்கம், சர்வதேச சங்கம் நடவடிக்கைகள், உலக நாடுகளிடையே 1க்ஷ்65-இல் போர் நடவடிக்கைப்பற்றி ஏற்பட்ட ஒப்பிணக்க முறைகள்.
gear
n. இழுவை விலங்குகளின் சேணம், துணைக்கலம், துணைப்பொருள், துணை அமைவு, துணைக்கருவி, கப்பல் பாய்மரக்கருவிகளின் தொகுதி, கருவிதளவாடங்களின் குவை, சக்கரங்கள்-நெம்புகோல்கள் முதலிய தட்டுமுட்டுப் பொருள்களின் தொகுதி, சக்கர நெம்புகோல் இணைப்பு, பற்கள் முதலியவற்றால் ஒன்றையொன்று இயக்கும் சக்கரங்கள், இயந்திரப் பொறியையும் அதன் துணைப்பொறிகளையும் இணைக்கும் வகைமுறைகள், கப்பல்பாய் இழுப்புக் கயிறுகள், வீடடுத் தட்டுமுட்டுப் பொருள்கள், (வினை) இழுவை விலங்குக்குச் சேணம் பூட்டு, இயந்திரம் இயங்குவதற்கு ஆயத்தப்படுத்து, தளவாடம் பொருத்து, பற்சக்கரம் வகையில் சரியாகப் பொருந்து, தொழில்களில் அல்லது தொழிற்சாலைகளில் ஒன்றை மற்றொன்றுக்குக் கீழ்ப்பட்டதாக்கு அல்லது துணையான தாக்கு, பெருந்திட்டத்தின் கீழ்க் கொண்டுவா.
gearing
n. குதிரைச்சேணம், தொழிற்றுறைக் கருவிகலத் தொகுதி, இயந்திர இயக்கங் கொண்டுசெல்லும் நெம்பிணைப்புக்களின் அமைப்பு.
gecko
n. வெப்ப வானிலைப்பகுதிகளிற் காணப்படும் வீட்டுப்பல்லி.
gee
-1 n. (பே.வ.) குதிரை.
gee-ho, gee-hup
திரை முதலியவற்றைத் தூண்டும் குறிப்பிடைச்சொல், செல், விரைந்து செல்.
geese, n. goose
என்பதன் பன்மை.
Gehenna
n. நரகம், அளறு, எரியூட்டுமிடம், சித்திரவதை செய்யுமிடம், துன்பத்துக்குரிய இடம்.
Geiger counter, Geiger-Muller counter
n. கதிர் இயக்கத்தைக் கண்டுபிடிப்பதற்கான கருவிவகை.
geisha
n. (ஜப்.) ஜப்பானிய ஆடல் மகள்.
Geissler tube
n. மின்னோட்டம் கடந்து செல்லும்போது வெள்ளொளி பரப்பும் அழுத்தம் மிகக் குறைக்கப்பட்ட வளி நிரம்பிய குழாய்.
geist
n. (செர்.) அறிவுணர்வியக்க ஆற்றல், ஆர்வத்திறம், ஆர்வப்பாங்கு, ஊக்கமூட்டுந்திறம், ஆட்கொள்ளும் ஆற்றல்.
gel
n. கூழ்ப்போலியான அரைத் திண்மக்கரைச்சல், (வினை) அரைத்திண்மக் கரைசலாகு.
gelatinate
v. ஊன்பசையாக்கு, இழுதாகச்செய்.
gelatine
n. ஊன்பசை, எழும்பு தோல்களிலிருந்து எடுக்கப்பட்டு உணவுப்பொருள் துறை - நிழற்படத்தகடு - பசைகள் முதலியவற்றிற் பயன்படும் கூழ்போன்ற பொருள்.
gelatinous
a. ஊன்பசைக்குரிய, ஊன்பசை போன்ற, இழுதுநிலைப்படுத்தப்பட்ட.