English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
floor
n. தரை, அறையின் நிலத்தளம், அடித்தளம், கடலடி, குகையடி, மாமன்றத்தில் உறுப்பினர்கள் அமர்ந்து பேகுமிடம், வீட்டில் ஒரே தளத்திலிருக்கிற அறைகளின் தொகுதி, வீட்டின் அல்லது கட்டிடத்தின் தள அடுக்குகளில் ஒன்று, சமதளமான பரப்பு, குறைவிலை எல்லைத்தளம், (வினை)தளமிடு, கல்பாவு, அடித்தளமாகப் பயன்படு, நிலத்தளத்தில் வீழ்த்து, விழும்படி மோதித்தள்ளு, குழப்பு, திகைக்கவை, பாடம் தெரியாததால் பள்ளிமாணவனை அமர்ந்து விடும்படி சொல், வெற்றியடை, வெல், அடக்கியாள்.
floor-cloth
n. தரைவிரிப்பு.
floor-show
n. மன்றங்களில் மேடையில் அன்றி நிலத்தளத்தின் மீதிலேயே இராப்போது காட்டப்படும் காட்சி.
floor-timber
n. கப்பலின் அடிக்கட்டைக்கு அடுத்துக்குறுக்கே அமைக்கப்பட்டுள்ள கட்டை.
floorer
n. மோதிவீழ்த்தும் அடி, வெல்லும்சொல், விடையிறுக்க இயலாத்தேர்வு வினா, மன உலைவுதரும் செய்தி.
flooring
n. தளமிடுதற்கானபலகை முதலிய மூலப்பொருள், செய்தளம், மேடை.
flop
n. தொப்பென்ற ஒலி, கடக்கு கடக்கென்ற அசைவு, தள்ளாடிச் செல்லதல், வீழ்ச்சி, தோல்வி, முறிவு, (வினை) தொப்பென்ற விழு, அசட்டையாகக் கீழே விட்டெறி, அலங்கோலமாகக் குந்தியிரு, தடுமாறி நட, அருவருப்பான முறையில் நுடங்கிநட, கடக்கு கடக்கென்று ஆடிச்செல், (வினையடை) தொப்பென்று, கடக்கு கடக்கென்று, தள்ளாடித் தள்ளாடி.
flora
n. மரவடை, திணை அல்லது ஊழிக்குரிய செடிகளின் விளக்கப் பட்டியல்.
floral
a. மரவடை சார்ந்த, மலர்களுக்குரிய.
Florentine
n. இத்தாலி நாட்டிலுள்ள பிளாரென்ஸ் நகரில் வாழ்பவர், சாய்வரிப்பட்டு வகை, (பெ.) பிளாரென்ஸ் நகரைச் சார்ந்த.
florescence
n. மலர்ச்சி, முகை நெகிழ்ந்து மலராகும் நிலை, (தாவ.) மலர்ச்சிப்பருவம்.
floret
n. (தாவ.) கொத்துப்பூவின் கூறான சிறு மலர், சிறு மலர்.
floriate
v. மலர் உருவரைகளால் ஒப்பனைசெய்.
floriculture
n. மலர்ச்செடி வளர்ப்பு.
florid
a. பூவளமிக்க, பூவொத்த, பூவனப்புடைய, பகட்டொளி வண்ணம் வாய்ந்த, செக்கச்சிவந்த மலர்களால் அணிசெய்யப்பட்ட, மலர்போன்ற உருவரை ஒப்பனை செய்யப்பெற்ற, கலை இசைத்துறைகளில் நயவளமார்ந்த, இலக்கியத்துறையில் அணிவளமிக்க.
Florida
n. அமெரிக்க ஐக்கிய அரசுகளுள் ஒன்று.
floriferous
a. விதைகள் செடிகள் வகையில் மலர்களைத் தோற்றுவிக்கிற, மலர்வளத்துக்குரிய.
florilegium
n. (ல.) இலக்கிய இன்சுவைப்பகுதித்திரட்டு.
florin
n. முற்காலத்து ஐரோப்பிய பொன் அல்லது வெள்ளி நாணயவகை, (வர.) மூன்றாம் எட்வர்டு காலத்திய ஆங்கில நாட்டுப் பொன் நாணய வகை, இரண்டு ஷில்லிங்கு பெறுமான தற்கால ஆங்கிலநாட்டு வெள்ளி நாணயவகை.