English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
fir, fir-tree
கனங்குறைந்த உயர்தரக் கட்டைதரும் குளிர் மண்டல ஊசியிலை மரவகை.
fire
n. தீ, நெருப்பின் அழல், தீநா, தணற்கொழுந்து, சுடர், அனற்பொறி, எரிதல், அடுப்புக்கனல், உலை நெருப்பு, காட்டுப்பெருந்தீ, அழிவுப்பெருந்தீ, (செய்) மின்னல், எரிமலை அகக்கனல், வெப்பம், வெப்பு, காய்ச்சல், அழன்றெழும்,உணர்ச்சி எழுச்சி, சினம், கொதிகிளர்ச்சி, ஆர்வக்கனல், உயிர்த்துடிப்பு, கற்பனை, கவிதை யெழுச்சி, வேட்டு, வேட்டுத்தீர்வு, வேட்டுத்தொகுதி, தாக்குரை, கண்டனத்தொகுதி, எதிர்ப்பு, (வினை) தீவை, வெடி முதலியன வகையில் நெருப்புப்பற்றவை, வெடி-சுரங்க வகைகளில் தீப்பற்றிக்கொள், வெடிக்கவை, வேட்டுத்தகர், வணக்கமுறைவேட்டிடு, வெடிதீர்வுறு, வெப்பமூட்டு, தீயில் வாட்டு, மட்கல முதலியன கட்டு வேகவை, செங்கல் சுடு, சூடிடு, செயற்கை வெப்பத்தால் புகையிலை-தேயிலை முதலியவற்றைப் பதனம் செய், வெப்பமடை, சிவப்பாக்கு, விறகிடு, எரிபொருளுட்டு, சுட்டுத்தள்ளு, வெடித்து வீசியெறி, தள்ளு, வெளியேற்று, கற்பனை தூண்டு, ஊக்கமூட்டு, கிளர்ச்சியூட்டு, உணர்ச்சியூட்டு, சினமூட்டு, கிளர்ந்தெழு, சினந்தெழு.
Fire engine
தீயணைப்பு எந்திரம், தீயணைப்பு வண்டி
fire-alarm
n. நெருப்பு பற்றியதை அறிவிக்கும் தானியங்கிக் கருவி.
fire-arms
n. pl. சுடுபடைக்கலங்கள், வேட்டுப்படைக் கருவிகள், வெடிக்கும் போர்க்கருவிகள்.
fire-ball
n. பெரிய விண்வீழ் எரிகோளம், கோளவடிவமான மின்னல், எரிபொருள்கள் மநிறைக்கப்பட்ட பந்து வடிவடிமான போர்க்கருவி.
fire-bird
n. தேனீயை உண்ணும் பறவை வகை.
fire-blast
n. செடியினந் தாக்கும் நோய்வகை.
fire-blight
n. கனிமரங்களுக்குக் கரிந்த தோற்றத்தைத்தரும் காளான் நோய்வகை.
fire-box
n. நீராவி இயந்திரத்திலுள்ள நெருப்பறை.
fire-brand
n. எரிகொள்ளி, எரியும் மரத்துண்டு, சச்சர வினைத் தூண்டுபவர், கலகக்காரர்.
fire-brick
n. தீக்காப்புடைய செங்கல்.
fire-brigade
n. தீயணைப்புப்படை.
fire-clay,
சுடு செங்கலுக்குரிய களிமண்.
fire-control
n. கப்பல்-கோட்டைப் பீரங்கிகளின் வேட்டுக் கட்டுப்பாட்டமைவு.
fire-damp
n. சுரங்க எரியாவி, நிலக்கரிச் சுரங்கத்தில் காற்றுடன் கலக்கும் சமயம் வெடிவிபத்து விளைவிக்கும் கரிய நீரகைவளி.
fire-dog
n. அடுப்புக்கட்டை, விறகு அணைகோல்.
fire-drake
n. விண்கீழ் கல், செர்மானிய பழங்கதை மரபில் தீயுமிழ் வேதாளம், கம்பவெடி.
fire-drill
n. குச்சியைச் சுழற்றி அல்லது முறுக்கித் தீயுண்டாக்கும் பண்டைய கருவி, ஞெலிகோல்.
fire-eater
n. மாயச்செப்பிடு வித்தைக்காரர், பயங்கர மற்போர் வீரர், கலகக்காரர், சண்டைப்பிரியர்.