English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
fender-stool
n. தீத்தாங்கிப் பக்கத்திலுள்ள நீண்ட கோக்காலி.
fenestella
n. திருக்கோயிலில் திருக்கலங்களைக் கழுவின நீர் ஊற்றி வைக்கபடுவதற்குரிய பலிபீடத்துக்குச் சற்றுத்தெற்கிலுள்ள மாடக்குழி.
fenestrate, fenestrated
a. சிறுசாளரத்தை யொத்த தொளைகளையுடைய.
fenestration
n. கட்டிடத்தில் சாளரங்களின் ஒழுங்கமைப்பு, (தாவ., வில.) பலகணியொத்த சிறு தொளையுடைய.
Fenian
n. அயர்லாந்தில் ஆங்கில ஆட்சியை ஒழிப்பதற்காக அமெரிக்காவில் நிறுவப்பட்ட ஐரிஷ்காரர் கழக உறுப்பினர், (பெ.) அமெரிக்க ஐரிஷ்காரர் கழகத்தை சேர்ந்தவர்.
fenks
n. pl. திமிங்கிலக் கொழுப்பின் நார்க்கற்றை, உருக்கிய கொழுப்பின் மண்டி.
fennec
n. பெரிய காதுகளையுடைய சிறு ஆப்பிரிக்க நரிவகை.
fennel
n. சதகுப்பை, குழம்பு வகையில் பயன்படுத்தப்படும் குகைப்பூக்கொத்து மஞ்சள் மலருடைய நறுமவ்ப் பூண்டு வகை.
fenugreek
n. வெந்தயம், குதிரை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் பயற்றினச் செடிவகை.
feoff
n. நிலமானியம், படை முதலிய துறை ஊழியவகையில் ஊழியத்துக்கீடாக அளிக்கப்படும் நிலவுரிமை, (வினை) ஊழியத்துக்கீடாக நிலமானியம் வழங்கு.
feoffee
n. ஊழியத்துக்கீடாக நிலமானியம் வழங்கப்பெற்றவர்.
feoffer
n. ஊழியத்துக்கீடாக நிலமானியம் வழங்குபவர்.
feoffment
n. ஊழிய மானியக்கொடை, பட்டய நிலவுரிமை வழங்கப்பட்ட முறைமை.
fer de lance
n. தென் அமெரிக்க மிகு வெப்பமண்டலத்தைச் சேர்ந்த பெரிய நச்சுப்பாம்பு வகை.
ferae naturae
a. (ல.) இல்வளம்படாத, காட்டில் வாழ்கிற.
feral
-1 a. இயற்கை நிலையிலுள்ள, பழக்கப்படாத, பண்படாத, காட்டுநிலையில் உள்ள, விலங்கியல்புள்ள.
feretory
n. திருத்தொண்டரின் நினைவுச் சின்னங்களுக்கான கோயில், பள்ளிப்படை.
ferial
a. விடுமுறைநாளுக்குரிய, விழா நோன்பு தவிர்த்த நாளுக்கு உரிய.
Feringhee, Feringhi
இந்தியர்கள் வழக்கில் ஐரோப்பியர், இந்தியாவில் பிறந்த போர்ச்சுக்கீசியர், பறங்கியர்.
ferment
-1 n. புளிப்பு, புளிப்புமா, புளிக்கச்செய்யும் பொருள், புளித்தல், பொங்குதல், கிளர்ச்சி, கொதிப்பு, கலகம்.