English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
elder
-1 n. உறவினரில் மூத்தவர், இருவரில் மூப்பானவர், நிறுவனங்களில் சிறப்புயர்வுடைய உறுப்பினர் குலாத்தில் ஒருவர். ஸீப்புக்காரணமாக உயர்பதவிபெற்றவர், முதியவர், மேலவை உறுப்பினர், தொடக்ககாலக் கிறித்தவத் திருச்சபைப் பணியாளர், திருச்சபை வகையில் பணியாளர், (பெ.) உறவினர்களில் மூத்த, இருவரில் வயது முதிர்ந்த, நீண்டகாலம் வாழ்ந்த, முன்பிறந்த, முன்தோன்றிய.
elder-berry
n. வெள்ளை மலருடைய உயரக்குறைவான மரவகையின் புளிப்பான கருஞ்சிவப்புப்பழம்.
elder-wine
n. வெள்ளை மலருடைய உயரமில்லாத மர வகையின் பழங்களிலிருந்து இறக்கப்படும் இன்தேறல்.
elderly
a. வயதாகிக்கொண்டு வருகிற.
eldership
n. மூத்தவராயிருக்கும் நிலை, பிரிஸ்பிடீரியப் பிரிவுத்திருக்கோயில் அலுவலர் பதவி.
eldest
a. முதற்பிறந்த, இருப்பவர்களில் மூத்த, எல்லாரிலும் மூத்த.
elecampane
n. கசப்புச்சுவையும் நறுமணமும் உள்ள இலைகளையும் வேரினையும் உடைய செடிவகை, செடிவகையினால் நறுமவ்ம் ஊட்டப்பெற்ற தின்பண்டம்.
elect
n. தேர்ந்தெடுக்கப்பெற்றவர், தனிப்படத் தேர்ந்தெடுத்து அமர்த்தப் பெற்றவர், (பெ.) தேர்ந்தெடுக்கப்பட்ட, மிகவுயர்ந்த, விடுபேற்றுக்கெனக் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட, பதவி முதலிய வற்றிற்குத் தெரிந்தெடுக்கப்பட்டும் பதிவ யேற்காத, (வினை) தெரிந்தெடு, வாக்கு மூலமாய்த் தேர்ந்தெடு, (கடவுள்) வீடுபேற்றுக்கெனப் பொதுநீக்கிச் சிலரைத் தேர்நள்தெடு.
election
n. வாக்கு மூலம் தெரிந்தெடுத்தல், தேர்தல், தங்கு தடையற்ற விருப்பம், சிலருக்கு வீடு பேறளிப்பதென்முன்னரே கடவுள் கொண்ட திருவுளப்பற்றுதல்.
electioneer
n. ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு உழைப்பவர், (வினை) ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு பாடுபடு.
elective
n. தேர்ந்தெடுப்புக்குரிய, தேர்தலைப் பொறுத்திருக்கிற, தேர்தல் அதிகாரத்தைச் செலுத்துகிற,தேர்ந்தெடுக்கும் அதிகாரமுடைய, தேர்தலினால் அமர்த்தப்படுகிற, தேர்ந்து நிரப்பப்படத்தக்க.
elector
n. வாக்காளர், தேர்ந்தெடுப்பவர், தேர்ந்தெடுக்கும் உரிமையுள்ளவர், (வர.) முன்பு செர்மன் பேரரசின் தேர்தலில் பங்குகொள்ள உரிமை பெற்றிருந்த இளவரசர்.
electoral
a. தேர்தலுக்குரிய, வாக்காளர் தொடர்பான, வாக்காளர்களைக் கொண்ட.
electorate
n. வாக்காளர் தொகுதி, தேர்தல் தொகுதி, (வர.) முன்பு செர்மன் பேரரசின் தேர்தலில் பங்கு கொள்ள உரிமை பெற்றிருந்த இளவரசரின் பதவி, செர்மன் பேரரசுத் தேர்தல் உரிமையுடைய இளவரசர் ஆட்சியெல்லை.
electordynamics
n. மின்விசையியக்கவியல்.
electoress,
n. fem. பெண்வாக்காளர்.
electress,
n. fem. பெண்வாக்காளர், (வர.) முன்பு செர்மன் பேரரசின் தேர்தலில் பங்குகொள்ள உரிமை பெற்றிருந்த இளவரசரின் மனைவி.
electric
n. உரசித்தேய்ப்பதனால் ஆற்றல் எழுப்பக்கூடிய பொருள், (பெ.) மின்ஆற்றலுக்குரிய, மின்வலி ஏற்றப்பட்டுள்ள, மின்ஆற்றல் பெருக்கக்கூடிய, மின்ஆற்றல் உண்டாக்குகிற, மின் ஆற்றலால் விளைகிற,. மின் ஆற்றலைக் கொண்டு செல்லுகிற, மின் ஆற்றலால் இயக்கப்படுகிற, மின் வெட்டுப்போன்ற, நிலையற்ற.
electrical
a. மின் ஆற்றலுக்குரிய.