English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
defecate
v. வண்டலகற்று, மாசு நீக்கு, தூய்மைப்படுத்து.
defect
n. வழு, குற்றம், மாசு. ஊனம், குறைபாடு, ஊறுபாடு, உருக்குறை, முழுமைநிலை கெடுக்கவல்ல உயிர்ப் பண்புக்கூற்றின் குறைநிலை.
defectible
a. நிறைவெய்தாத, குறைபாடுள்ள.
defection
n. கடமை தவறுதல், கடமை வழு, தலைமை மீறுகை, கட்சித்துறப்பு, கொள்கை கைநெகிழ்வு, சமயம் கைவிடுகை, விலகுதல், விட்டேகுதல்.
defence
n. பாதுகாப்பு, அரண்காப்பு, மரப்பந்தாட்டத்தில் எதிராட்டம் ஆடுதல், தாக்குதலை எதிர்த்த தற்காப்புப்போர், மரப்பந்தாட்டத்தில் இலக்குக் காப்பு, குற்றச்சாட்டுரககெதிரான தன்னிலை விளக்கம், உரிமை மெய்ப்பிப்பு, எதிர்வாதி பக்கத்து வாதவிளக்கம், எதிர்வாதி பக்க வழக்கு நடவடிக்கை.
defences
n. pl. பாதுகாப்பு அரண்கள், அரண்காப்பு முறைகள்.
defend
v. பாதுகாப்புச் செய், காவல் செய், தாக்குதலை எதிர்த்து நில், படைக்கலத்தாக்குதலை எதிர்த்து விலக்கு, தீமை எதிர்த்துப் போராடு, இன்னல் தடுத்தாதரி, காப்பாற்று, (சட்) அழிவழக்காளருக்கெதிராக உரிமை காத்து நில், குற்றச்சாட்டுக்கு எதிர் விளக்கமளித்து வழக்காடு, எதிர்வழக்காடு, வழக்குரைஞர் வகையில் எதிர்வாதி பக்கம் வாதாடு, எதிர்வாதிசார்பில் வழக்கு நடத்து.
defendant
n. பாதுகாப்பவர், (சட்)எதிர்வாதி, பிரதிவாதி.
defended
a. பாதுகாக்கப்படட, காவல் செய்யப்பட்ட, அரண்காப்புச் செய்யப்பட்ட, தாக்குதலுக்கு எதிராகத் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் முற்றுவிக்கபட்ட.
defender
n. பாதுகாப்பாளர், ஆதரவாளர், பெற்ற வாகை வீரப் பதவியை இழந்துவிடாமல் காப்பவர்.
defer
-1 v. தள்ளிவை, ஒத்திப்போடு, காலங்கடத்து, காலந்தாழ்த்து, தயக்கங்காட்டு,
defer(2)
v. கீழ்ப்படி, விட்டுக் கொடு, இணங்கிப்போ.
deference
n. பணிவிணக்கம், மேலோர்க்குக் காட்டும் வணக்கத்தோடு கூடிய நன்மதிப்பு, மேலோர் கருத்துக்குக் காட்டப்படும் பணிவிசைவு, பண்பிணக்கம், விட்டுக் கொடுத்தல்.
deferent
n. உடலில் வெளிநோக்கிச் செல்லும் குருதி நாளம், (பெயரடை) கொண்டு செல்கிற, புறநோக்கிச் செலகிற, பணிவிணக்கமுடைய, இணக்க வணக்கம் காட்டுகிற.
deferential
a. பணிவிணக்கம் காட்டுகிற.
deferment
n. தள்ளிப்போடுதல்.
deferrer
n. காலந்தாழ்த்துபவர், காலங்கடத்துபவர், ஒத்திப்போடுபவர்,
defervescence, defervescency
n. வெப்பத் தணிவு, குளிர்ச்சி, காய்ச்சலின் அறிகுறிகள் தளர்வுறுதல்.
defeudalize
v. நிலமானியத்திற்குரிய பண்பிலிருந்து விலக்கு.