English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
duumvirate
n. ஒரு பதவியில் இருவர் இணையமர்வு, இருமை ஆட்சி, சம அதிகாரமுள்ள இரண்டு அலுவலர்கள் நடத்தும் ஆட்சி.
duumvirf
n. சரிசமநிலையுடைய இருவரடங்கிய குழுமத்தின் உறுப்பினர்.
duvet
n. கடல்வாத்து வகையின் அல்லது அனனத்தின் தூவியினால் நிரப்பப்பட்ட மெத்தை.
dux
n. சட்டாம்பிள்ளை, பள்ளியில் அல்லது வழூப்பில் தலை மாணவன் அல்லது மாணவி, முதல்வர்.
dwarf
n. குள்ளன், விலங்கில் கூழை, செடிமர இனத்தில் தன்னளவில் குறுகிய வளர்ச்சியுடையது, குள்ளத் தெய்வதம், கூளி, குறளி, வளர்ச்சிகுன்றியவர்., வளர்ச்சி குன்றியது, தன் இனத்தில் சிறியது, உஸ்ர் எடைமானத்துடன் தாழ் ஒளிர்வுடைய விண்மீன், (பெயரடை) மிகச்சிறிய, குட்டையான, தடைப்பட்ட வளர்ச்சியுடைய, (வினை) வளர்ச்சியைத் தடு, வளர்ச்சிகுறுக்கு, ஒப்பீட்டால் சிறிதுபடுத்து, தொலைவால் மிகச் சிறியதாகத் தோன்றும் படி செய்.
dwarfed
a. வளர்ச்சி தடைப்படுத்தப்பட்ட, கூழையான.
dwarfish
a. குள்ளனைப்போன்ற, மமிகச்சிறிய, வெறுக்கத்தக்க, இகழ்ச்சிப்பொருளான.
dwell
n. இடைத்தயக்கம், இயந்திரத்தின் நொடிநேர இடை நிறுத்தம், (வினை) தங்கு, தங்கிவாழ், குடியிரு, மெல்ல இயங்கு, ஊன்றிநினை, கருத்தூன்றி நீடித்துப்பேசு, நினைவூன்றி விரித்தெழுது, காலநீட்டிப்புச் செய், (குதிரை) மெதுவாகக் கால்களைத் தூக்கு, தடை வேலியைத் தாண்டுமுன் தயங்கு.
dweller
n. குடியிருப்பவர், தங்கிவாழ்பவர், தடைவேலியண்டைத் தயங்கிநிற்கும் குதிரை.
dwelling
n. தங்குதல், குடியிருத்தல், குடியிருப்பிட, வீடு, நீடிப்பு, நிலைப்பாடு.
dwelling-house
n. குடியிருப்பு வீடு.
dwelling-place
n. குடியிருப்பிடம்.
dwindle
n. நலிவு, (வினை) ஒடுங்கு சுருங்கு, குன்று, மெலி, குறை சீர்கேடுறு, சிதைவுறு, முதன்மை குறைவுறு, தரத்தில் இழிவுறு.
dyad
n. இரண்டன் தொகுத்தி, இணை, இரட்டை, சோடி, (வேதி), நீரக ஈரணுவுடன் இயையும் தனிம அணு, நீரக ஈருணுவுடன் இயையும் மூலப்பொருள் அணு.
Dyak
n. போரினியோத் தீவின் தொல்குடியினர்.
dye
n. வண்ணச்சாயம், சாயப்பொருள், சாயநீர், வண்ணம், சாயல், (வினை) சாயந்தோய்வி, வண்ணந்தீட்டு, நிறங்கொடு, வண்ணக் கறைப்படுத்து, வண்ணம் பெறு, நிறம் எளிதில் தோயப்பெறு.
dye-stuff
n. சாயப்பொருள்.
dye-wood
n. சாயமிடுதற்குரிய பொருள் கிடைக்கப்பெறும் கட்டை வகை.
dye-works
n. சாய நிறுவனம், சாயச்சாலை.
Dyeing
சாயப்பூச்சு, சாயம் தோய்த்தல்