English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
dog-ear
n. புத்தக மூலை மடிப்பு (வினை) புத்தகத்தை மூலையில் மடியவிடு.
dog-fall
n. மல்லர்கள் வகையில் இருதரப்பினரும் ஒருங்கே தரையில் விழுதல்.
dog-fight
n. நாய்ச்சண்டை, குழப்பமிக்க கைகலப்பு.
dog-Latin
n. பிழைபட்ட சொச்சைக்கலவை லத்தீன் மொழி.
dog-lead
n. நாய்க்கயிறு. நாய்ஞாண்.
dog-letter
n. உறுமல் ஒலியுடைய எழுத்து.
dog-sick
a. முழுதும் நோயுற்ற, முழுமையும் நோய்ப்பட்டுள்ள.
dog-trick
n. கீழ்த்தரமான சூழ்ச்சி.
dog-watch
n. குறுகிய காவல் நேரம், நான்கு மணிக்குப் பதில் இரண்டு மணியடைய மாலை முன்னிரவுக்காவல் தவணைகளில் ஒன்று.
dogatge
n. முற்கால வெனிஸ் ஜெனோவா நகரக் கடியரசுகளின் தலைவர் பணிமனை.
dogbane
n. நாய்களைக் கொல்லும் நச்சுச்செடி வகை.
Dogberry
-2 n. தற்பெருமை மிக்க நடுவயதினன்.
dogberry,
-1 n. இலையுதிர்காலத்தில் தண்டும் இலையும் சிவப்பாக மாறகின்ற சிறமரவகை. ஊதா நிறப் பழவகை.
dogcart
n. இருசக்கரமும் முதுகுக்கு முதுகான ஈரிருக்கையுமுடைய குதிரைவண்டி வகை.
dogdays
n. pl. அழல்மீன் நாட்கள், கத்திரிக்காலம், அழல் மீன் கதிரவனோடு தோன்றி மறையும் மிகவெப்பமான காலப்பகுதி. (சூலை 3 முதல் ஆகஸ்டு 11 வரையுள்ள நாட்கள்.)
doge
n. முற்கால வெனிஸ் ஜெனோவா நகரக் குடியரசுகளின் தலைவர்.
dogfancier
n. நாய்வளர்ப்பவர், நாய் விற்பவர்.
dogfish
n. சிறுசுறாமீன் வகை.
dogged
a. வேட்டைநாய்ப் பிடியான, விடாப்படியுடைய, சிறிய, சிடுசிடுப்பான.