English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
binac
n. மீவிரைவுடைய மின்னியக்கக் கணிப்புமானி.
binary
n. விண்மீன் இரட்டை, தம் மையம் சுற்றும் வின்மீனிணை, (பெ) இரண்டிணைந்து உருவான, ஈரிணையான, இருமடங்கான.
binaural
a. இரு செவிகளையுடைய, இரு செவிகளையும் பயன்படுத்துகிற, இரு செவிகளையும் சார்ந்த.
bind
-1 n. கடுங்களி, நிலக்கரி அடுக்குகளிடைப்பட்ட இறுகிய கடுங்களிமண் பாளம், முசுமுசுக்கை சார்ந்த செடியினத்தின் அடித்தாள் கட்டை, (இசை.) சுர இணைப்புக்குறி, இருசுரங்களை ஒன்றாக ஆக்கி இணைக்கும் வளைப்புக்குறி.
binder
v. பிணிப்பவர், ஏடுகட்டுபவர், அறுவடைசெய்தகதிர்மணிகளைச் சேர்த்துக் கட்டும்பொறி.
binding
n. கட்டுப்படுத்துதல், கட்டுப்பாடு, ஏட்டின் மேல் அட்டை, ஏட்டுக கட்டிடப்பணி, (பெ.) தடுக்கிற, கட்டுப் படுத்துகிற, கடப்பாடாயமைந்த.
Binding works
கட்டகப் பணியகம், நுற் கட்டடம், நுற் கட்டுப் பணியகம்
bindweed
n. (தாவ.) தழுவு கொடிவகை, கட்டுக்கொடி.
bine
n. (தாவ.) நெகிழ்வுடைய இளந்தண்டு, தழுவு கொடியின் மெல்லிய தண்டு.
binnacle
n. (கப்.) திசையறிகருவி வைக்கப்பட்டுள்ள பேழை.
binocular
n. இரட்டைத் தொலைநோக்காடி, இருகண் நுண்ணோக்காடி, (பெ.) இருகண்கயடைய இருகண்களுக்கேற்ற, இருகண்காட்சி மூலம் பிழம்புருக்காட்டுகிற.
binomial
n. (கண) ஈருறுப்புத்தொடர். (பெ.) குறிமதிப்பெண் இரண்டு கொண்ட.
binominal
a. இரட்டைக்கிளவியான பெயர்கொண்ட, இனப்பெயறும் வகைப்பெயரும் அடங்கிய இரு பெயருடைய.
binturong
n. வாலால் பற்றும் ஆற்றலுடைய புனுகுப்பூனை போன்ற ஊனுணி விலங்கு வகை.
bio-bibliographical
n. ஒருவருடைய வாழ்க்கை வரலாற்றையும் அவரெழுதிய நுல்களையும் பற்றிய.
bioblast
n. ஊன்மத்திலிருப்பதாகக் கருதப்படும் உயிர்க்கூறு.
biochemical
a. உயிர்வேதியியல் சார்ந்த.
biochemist
n. உயிர்வேதியியல் வல்லுநர்.