English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
batik
n. துணியில் சாயம் போட வேணடியிராத பாகங்களுக்கு மெழுகு பூசி எஞ்சிய பாகங்களில் வண்ணப்படங்களை அச்சிடும் கீழைநாட்டு முறை.
batiste
n. மெல்லிய இழையுள்ள நேர்த்தியான துணி, (பெ) மெல்லிய இழையுள்ள, நேர்த்தியான துணிக்குரிய.
batman
n. பொதிகுதிரைப்பாகன், அதிகாரியின் வேலையாள்.
batological
a. முட்செடி ஆய்வுக்குரிய.
batologist
n. முட்செடி ஆய்வாளர்.
batology
n. முட்செடி பற்றிய ஆய்புநுல்.
baton
n. ஊர்க்காவலரின் குறுந்தடி, கட்டியக்கோல், (கட்) கேடயத்திலுள்ள குறுந்தடி வடிவம், (இசை) இசைக்குழுத்தலைவர் தாளத்தைக் குறிப்பதற்காக அசைக்கும் கோல், (வினை) தடியாலடி.
batrachia
pl. நிலநீர்வாழுயிர்கள், தவளை-தேரையினம்.
batrachian
n. நிலநீர் வாழுயிர்களில் ஒன்று, செவுள்களையும் வாலையும் உதிர்த்துவிடும் உயரினங்களில் ஒன்று, (வின தவளை-தேரையினத்துக்குரிய, நிலநீர்வாழுயிர்களுக்குரிய.
batsman
n. மரப்பந்தாட்டக்காரர்.
batswing
n. வாவல் அடுப்பு, வெளவால் இறகு போன்ற வடிவுடைய அழல்காட்டும் பொறி அடுப்பு வகை.
batta
n. (த.) படைத்துறையில் கொடுக்கப்படும் உதவிப்படி, படிச்செலவு, படிப்பணம், செவுப்படி, பட்டைச்சோறு.
battalia
n. போரணி, அணிவழூப்புப் படையில் சிறப்புப் பிரிவு.
battalion
n, அணிவகுத்த படை, போர் அணிப்பிரிவு.
battels
pl. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மடப்பள்ளிகளிலிருந்து பெறும் பண்டங்களுக்கான கணக்குகள், கல்லுரிக்கணக்குகளில் காட்டப்படும் செலவுத்தொகைகள்.
batten
-1 n. தளம் பாவுதற்குப் பயன்படும் மரப்பலகை, கம்பை, அள்ளு, பற்று, மின் விளக்குகளின் வரிசை, மின் விளக்குக்ள பொருத்தப் பெற்றுள்ள மரச்சட்டம், (கப்.) உராய்தலைத் தடுப்பதற்காக தூலத்தின்மேல் ஆணியடித்துப்பொருத்தப்படும் மரத்துண்டு, (வினை) அள்ளுகளைக் கொண்டு வலுப்படுத்து, அள்ளுகள் அமை.
battening
n. சுவர் அல்லது சட்டத்தின்பேரில் அள்ளுகள் அமைந்த மரவேலைப்பாடு.
batter
-1 n. நீர்மத்தில் சேர்த்துப்பசையாகக் குழைக்கப்படும் பொருள்கள், ஓட்டுதற்கான பசை, அச்சுரு அல்லது அச்சுருத் தகட்டிலுள்ள வடு, (வினை) நை, நொறுக்கு, பீரங்கிகளைக் கொண்டு தாக்கு, கடுமையாக நடத்து, உருக்குலையுமாறுதகர், அடித்துப் பள்ளமுண்டாக்கு, உபயோகத்தின் மூலம் உருச்சிதை.
battering-charge
n. பீரங்கியில் செறிக்கத்தக்க வெடி மருந்தின் முழுநிறை அளவு.