English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
bonneted
a. மெல்லிய குல்லாயுள்ள, மேல் மூடியைக்கொண்ட.
bonnett-piece
n. குல்லாய் அணிந்த அரசன் தலையுருக்காக.
bonnie
a. அழகிய, வனப்புமிக்க, கழிமகிழ்வுள்ள, கொழு கொழுத்த, மனநிறைவளிக்கத்தக்க, தளதளப்பான.
bonnily
adv. அழகுடன், அகமகிழ்வாக.
bonniness
n. அழகு, மகிழ்ச்சி.
bonny-clabber
n. புளித்து இயல்பாக உறைந்த பால்.
bonspiel
n. போட்டி ஆட்டம், ஸ்காத்லாந்து நாட்டுக்குரிய சறுக்குதல் ஆட்டப் போட்டிப்பந்தயம்.
bonus
n. நல்லுதியம், மிகையூதியம், மீதூதியம், பங்கு மிகையூதியம், காப்பீட்டு உறுதித்தாளர்களுக்குரிய ஆதாயப்பங்கு ஊதியம், உழைப்புக்கூலியல்லாத விருப்பக் கொடையூதியம், வட்டிக்கு மிகுதியான விருப்பக் கட்டணம்.
bonvivant
n. (பிர.) இனியபாங்கர், மட்டின்றிவாழ்பவர், நாக்குருசி படைத்தவர், குதிர்.
bonxie
n. பெரிய கடற்பறவை.
bony
a. எலும்பைச்சார்ந்த, பெரிய எலும்புடைய, எபுபோன்ற, திண்ஐணிய, வற்றலான, உணங்கிய, மெல்லிய, சதைப்பற்றற்ற, ஒடுங்கிய, சதைக்குறைவுள்ள, எலும்பு நிரம்பிய, கடுமையான.
bonze
n. ஜப்பானிய-சீனப் புத்தசமயக்குரு.
boo
int. வெறுப்புணர்த்தும் ஒலிக்குறிப்பு, கண்டன ஓசைக்குறிப்பு, (வினை) கூப்பாடுபோடு, இரைந்து வெறுப்பைக்காட்டு.
boob
n. வெள்ளையுள்ளத்தான், பேதை.
booby
n. அசடன், பெருமுகடி, முட்டாள், பேதை, வகுப்பின், கடைமாணவன், மிக எளிதாகப் பிடிக்கக்கூடிய கடற்பறவைவகை.
booby-prize
n. இறுதி மதிப்பெண்ணுக்குரிய பரிசு.
boobyish
a. முழுமுடத்தனமான.
boobyism
n. பெரும்பேதைமை, கழிமடமை.
boobytrap
n. நையாண்டிச் சூழ்ச்சிப்பொறி, எதிர்பாராது தொட்டவுடனே வெடிக்கும் பொறி அமைப்பு, (வினை) கேலி விளையாட்டுச் சூழ்ச்சி செய், தொடுவெடிப்பொறி அமை.
boodle
n. கூட்டு, குழாம், குழுமம், போலிநாணயம், பொய்ப்பணம், அரசியல் கைக்கூலிப்பணம், கொள்ளை ஊதியம், சீட்டாட்டம்.