தத்ராபஷ்யத்ஸ்திதாந்பார்த: பித்ருநத
பிதாமஹாந்। ஆசார்யாந்மாதுலாந்ப்ராத்ருந்புத்ராந்பௌத்ராந்ஸகீம்ஸ்ததா॥ 1.26 ॥ |
அர்ஜுனன் அங்கே இரண்டு அணிகளிலும் இருக்கின்ற தந்தையர், பாட்டன்மார், ஆச்சாரியார்கள், மாமன்மார், சகோதரர்கள், பிள்ளைகள், பேரங்கள், தோழர்கள் , மாமனார்கள், மற்றும் நண்பர்களை பார்த்தான்.
ஷ்வஷுராந்ஸுஹ்ருதஷ்சைவ ஸேநயோருபயோரபி। தாந்ஸமீக்ஷ்ய ஸ கௌந்தேய: ஸர்வாந்பந்தூநவஸ்திதாந்॥ 1.27 ॥ |
உறவினர் அனைவரையும் நன்றாக பார்த்த அர்ஜுனன் ஆழ்ந்த இரக்கத்தின் வசப்பட்டு நொந்த மனத்துடன் பின்வருமாறு கூறினான்.
அர்ஜுன உவாச। |
க்ருபயா பரயாவிஷ்டோ விஷீதந்நிதமப்ரவீத்। த்ருஷ்ட்வேமம் ஸ்வஜநம் க்ருஷ்ண யுயுத்ஸும் ஸமுபஸ்திதம்॥ 1.28 ॥ ஸீதந்தி மம காத்ராணி முகம் ச பரிஷுஷ்யதி। வேபதுஷ்ச ஷரீரே மே ரோமஹர்ஷஷ்ச ஜாயதே॥ 1.29 |
அர்ஜுனன் கூறினான்: கிருஷ்ணா ! போரிடுவதற்காக கூடி நிற்கின்ற இந்த உறவினரை பார்த்து எனது அங்கங்கள் சோர்வடைகின்றன. வாய் வரள்கிறது. உடம்பு நடுங்குகிறது . மயிர்கூச்செறிகிறது.
காண்டீவம் ஸ்த்ரம்ஸதே ஹஸ்தாத்த்வக்சைவ பரிதஹ்யதே। ந ச ஷக்நோம்யவஸ்தாதும் ப்ரமதீவ ச மே மந:॥ 1.30 ॥ |
கிருஷ்ணா ! எனது கையிலுருந்து வில் நழுவுகிறது. உடம்பு எரிகிறது. நிற்க முடியவில்லை, மனம் குழம்புவது போல் இருக்கிறது. விபரீதமான சகுனங்களையும் காண்கின்றேன்.