அஸ்மாகம் து விஷிஷ்டா யே தாந்நிபோத
த்விஜோத்தம। நாயகா மம ஸைந்யஸ்ய ஸம்ஜ்ஞார்தம் தாந்ப்ரவீமி தே॥ 1.7 ॥ |
மனிதருள் சிறந்தவரே ! நமது படையில் சிறந்த தலைவர்களாக உள்ளவர்களையும் உங்களுக்கு கூறுகிறேன். தெரிந்துகொள்ளுங்கள்.
பவாந்பீஷ்மஷ்ச கர்ணஷ்ச க்ருபஷ்ச
ஸமிதிம்ஜய:। அஷ்வத்தாமா விகர்ணஷ்ச ஸௌமதத்திஸ்ததைவ ச॥ 1.8 ॥ அந்யே ச பஹவ: ஷூரா மதர்தே த்யக்தஜீவிதா:। நாநாஷஸ்த்ரப்ரஹரணா: ஸர்வே யுத்தவிஷாரதா:॥ 1.9 ॥ |
துரோனாச்சாரியராகிய நீங்கள், பீஷ்மர், கர்ணன், வெற்றி வீரரான கிருபர், அசுவத்தாமன், விகர்ணன், சொமத்தத்தனின் மகனான பூரிசிரவஸ், ஆகியோருடன் மேலும் பல வீரர்களும் உள்ளனர். பலவிதமான ஆயுதங்களை தாங்கிய இவர்கள் போரில் வல்லவர்கள், என்னக்காக உயிரையும் கொடுக்க துணிந்தவர்கள்.
அபர்யாப்தம் ததஸ்மாகம் பலம்
பீஷ்மாபிரக்ஷிதம்। பர்யாப்தம் த்விதமேதேஷாம் பலம் பீமாபிரக்ஷிதம்॥ 1.10 ॥ |
பீஷ்மர் காக்கின்ற நமது படை அளவற்று பறந்து கிடக்கிறது. பீமன் காக்கின்ற பாண்டவர் படையோ அளவுக்கு உட்பட்டு நிற்கிறது.
அயநேஷு ச ஸர்வேஷு யதாபாகமவஸ்திதா:। பீஷ்மமேவாபிரக்ஷந்து பவந்த: ஸர்வ ஏவ ஹி॥ 1.11 ॥ |
நீங்கள் எல்லோரும் உங்கள் அணிவகுப்புகளில் அவரவர் இடங்களில் நின்றுகொண்டு பீஷ்மரையே காக்க வேண்டும் .
தஸ்ய ஸம்ஜநயந்ஹர்ஷம் குருவ்ருத்த: பிதாமஹ:। ஸிம்ஹநாதம் விநத்யோச்சை: ஷங்கம் தத்மௌ ப்ரதாபவாந்॥ 1.12 ॥ |
வல்லமை பொருந்தியவரும் குரு வம்சத்தில் மூத்தவரும் பாட்டணுமான பீஷ்மர் துரியோதனனுக்கு உற்சாகம் ஊட்டுவதற்காக சிம்ம கர்ஜனை போன்ற உரத்த ஒலியை எழுப்பினார் .சங்கையும் ஊதினார் .