ஸ கோஷோ தார்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயாநி
வ்யதாரயத்। நபஷ்ச ப்ருதிவீம் சைவ துமுலோ அப்யநுநாதயந்॥ 1.19 ॥ |
ஆகாயத்திலும் பூமியிலும் எதிரொலித்த அந்த பேரொலி கௌரவர் கூட்டத்தின் இதயங்களை பிளந்தது.
அத வ்யவஸ்திதாந்த்ருஷ்ட்வா தார்தராஷ்ட்ராந்
கபித்வஜ:। ப்ரவ்ருத்தே ஷஸ்த்ரஸம்பாதே தநுருத்யம்ய பாண்டவ:॥ 1.20 ॥ |
மன்னா ! அதன்பிறகு அனுமக்கொடியை உடையவனான அர்ஜுனன் போரை ஆரம்பிப்பதற்கு தயாராக நின்ற கௌரவர் அணியையும் ஆயுதங்கள் பாய தயாராக இருந்ததையும் கண்டு வில்லை உயர்த்தியபடி ஸ்ரீ கிருஷ்ணரிடம் இந்த வார்த்தைகளை கூறலானான்.
அர்ஜுன உவாச। |
ஹ்ருஷீகேஷம் ததா வாக்யமிதமாஹ மஹீபதே। ஸேநயோருபயோர்மத்யே ரதம் ஸ்தாபய மே அச்யுத॥ 1.21 ॥ யாவதேதாந்நிரிக்ஷே அஹம் யோத்துகாமாநவஸ்திதாந்। கைர்மயா ஸஹ யோத்தவ்யமஸ்மிந்ரணஸமுத்யமே॥ 1.22 ॥ |
அர்ஜுனன் கூறினான்: கிருஷ்ணா ! இரண்டு அணிகளுக்கும் இடையே எனது ரதத்தை நிறுத்து. யார் யாருடன் போர் செய்ய வேண்டும். போரிடுவதற்கு ஆவலுடன் வந்திருப்பவர்கள் யார்யார் என்பதை பார்கிறேன்
யோத்ஸ்யமாநாநவேக்ஷே அஹம் ய ஏதே அத்ர
ஸமாகதா:। தார்தராஷ்ட்ரஸ்ய துர்புத்தேர்யுத்தே ப்ரியசிகீர்ஷவ:॥ 1.23 ॥ |
தீய மனத்தினனான துரியோதனனுக்கு விருப்பமானதை செய்வதற்காக இங்கே போருக்காக கூடியிருப்பவர்களை நான் பார்க்க வேண்டும்.
ஸம்ஜய உவாச। |
ஏவமுக்தோ ஹ்ருஷீகேஷோ குடாகேஷேந பாரத। ஸேநயோருபயோர்மத்யே ஸ்தாபயித்வா ரதோத்தமம்॥ 1.24 ॥ பீஷ்மத்ரோணப்ரமுகத: ஸர்வேஷாம் ச மஹீக்ஷிதாம்। உவாச பார்த பஷ்யைதாந்ஸமவேதாந்குரூநிதி॥ 1.25 ॥ |
சஞ்ஜயன் கூறினார்: மன்னா ! அர்ஜுனன் இவ்வாறு கிருஷ்ணரிடம் கூறியதும் அவர் சிறந்த அந்த தேரை இரண்டு அணிகளுக்கு நடுவிலும் பீஷ்மர் துரோணர் மற்றும் எல்லா மன்னர்களும் எதிரிலும் நிறுத்தி, அர்ஜுனா , கூடியிருக்கின்ற இந்த கௌரவர்களை பார் என்று சொன்னார் .