தத: ஷங்காஷ்ச பேர்யஷ்ச பணவாநககோமுகா:। ஸஹஸைவாப்யஹந்யந்த ஸ ஷப்தஸ்துமுலோ அபவத்॥ 1.13 ॥ |
அதன் பிறகு சங்குகளும் பேரிகைகளும் தப்பட்டைகளும் பறைகளும் கொம்புகளும் திடிரென்று முழங்கின. அது பேரொலியாக இருந்தது.
தத: ஷ்வேதைர்ஹயைர்யுக்தே மஹதி ஸ்யந்தநே
ஸ்திதௌ। மாதவ: பாண்டவஷ்சைவ திவ்யௌ ஷங்கௌ ப்ரதக்மது:॥ 1.14 ॥ |
பிறகு வெண்ணிற குதிரைகள் பூட்டிய பெரிய ரதத்தில் இருந்த கிருஷ்ணரும் அர்ஜுனனும் தெய்வீகமான சங்குகளை உரக்க ஊதினார்கள்.
பாம்சஜந்யம் ஹ்ருஷீகேஷோ தேவதத்தம் தநம்ஜய:। பௌண்ட்ரம் தத்மௌ மஹாஷங்கம் பீமகர்மா வ்ருகோதர:॥ 1.15 ॥ |
ஸ்ரீ கிருஷ்ணர் பாஞ்சஜன்யம் என்ற சங்கையும், அர்ஜுனன் தேவதத்தம் என்ற சங்கையும், பெரும் செயல் ஆற்றுபவனாகிய பீமன் பௌன்ட்ரம் என்ற பெரிய சங்கையும் ஊதினார்கள்.
அநம்தவிஜயம் ராஜா குந்தீபுத்ரோ
யுதிஷ்டிர:। நகுல: ஸஹதேவஷ்ச ஸுகோஷமணிபுஷ்பகௌ॥ 1.16 ॥ |
குந்திதேவியின் மகனான யுதிஷ்டிரர் அனந்த விஜயம் என்ற சங்கையும், நகுலன் சகாதேவனும் ஷுகோஷம், மணிபுஷ்பகம் என்ற சங்குகளையும் ஊதினார்கள்.
காஷ்யஷ்ச பரமேஷ்வாஸ: ஷிகண்டீ ச மஹாரத:। த்ருஷ்டத்யும்நோ விராடஷ்ச ஸாத்யகிஷ்சாபராஜித:॥ 1.17 ॥ த்ருபதோ த்ரௌபதேயாஷ்ச ஸர்வஷ: ப்ருதிவீபதே। ஸௌபத்ரஷ்ச மஹாபாஹு: ஷங்காந்தத்மு: ப்ருதக்ப்ருதக்॥ 1.18 ॥ |
மன்னா ! சிறந்த வில்லாளியான காசி மன்னனும் மகாரதனான சிகண்டியும், திருஷ்டத்யும்னனும், விராடமன்னனும், வெல்ல முடியாதவனான சாத்யகியும், துருபத மன்னனும், திரௌபதியின் பிள்ளைகளும், தோல்வலிமை பொருந்திய அபிமன்யுவும் பிரகுவும் தனித்தனி சங்குகளை ஊதினார்கள்.