ஸம்ஜய உவாச। |
ஏவமுக்த்வார்ஜுந: ஸங்க்யே ரதோபஸ்த
உபாவிஷத்। விஸ்ருஜ்ய ஸஷரம் சாபம் ஷோகஸம்விக்நமாநஸ:॥ 1.47 ॥ |
சஞ்ஜயன் கூறினார்: இவ்வாறு சொல்லிவிட்டு அம்போடு கூடிய தனது வில்லை எறிந்தான் அர்ஜுனன், துக்கத்தில் துடிக்கின்ற மனத்துடன் போர்களத்தில் தேர்த்தட்டில் உட்கார்ந்தான்.
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகஷாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே அர்ஜுனவிஷாதயோகோ நாம ப்ரதமோ அத்யாய:॥ 1 ॥ |
ஓம் தத் ஸத் - ப்ரம்ம வித்யை, யோக ஸாஸ்த்ரம், உபநிஷத்து எனப்படும் ஸ்ரீமத்பகவத்கீதையாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் 'அர்ஜுன விஷாத யோகம்' எனப் பெயர் படைத்த முதல் அத்தியாயம் நிறைவுற்றது.
பாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனன் யுத்தகளத்தை கண்ட உடன் பதற்றம் அடைந்தான். அந்த பதற்றத்திற்கு காரணம் அவனுக்கு இந்த உலகத்தின் (அல்லது ) பிரபஞ்சத்தின் பூரண உண்மை தெரியாததால் அவன் அவ்வாறு பதற்றத்துக்கு உள்ளானான். தர்மதிற்கான யுத்தத்தில் தனது உறவினர்களும் கொல்லபடுவார்களே என்று அஞ்சினான். இவ்வாறு அஞ்சி நடுங்கி கொண்டிருந்த அர்ஜுனனுக்கு பகவான் கிருஷ்ணர் பூரண உண்மையை கூறி அவனது புத்தியை விழித்தெழ செய்தார்.