தஸ்மாந்நார்ஹா வயம் ஹந்தும்
தார்தராஷ்ட்ராந்ஸ்வபாந்தவாந்। ஸ்வஜநம் ஹி கதம் ஹத்வா ஸுகிந: ஸ்யாம மாதவ॥ 1.37 ॥ |
மாதவா ! உறவினராகிய துரியோதனன் முதலானோரை கொல்வது நமக்கு தகாது. உறவினரை கொன்றுவிட்டு நாம் எப்படி சுகத்தை அனுபவிக்க முடியும்.
யத்யப்யேதே ந பஷ்யந்தி லோபோபஹதசேதஸ:। குலக்ஷயக்ருதம் தோஷம் மித்ரத்ரோஹே ச பாதகம்॥ 1.38 ॥ கதம் ந ஜ்ஞேயமஸ்மாபி: பாபாதஸ்மாந்நிவர்திதும்। குலக்ஷயக்ருதம் தோஷம் ப்ரபஷ்யத்பிர்ஜநார்தந॥ 1.39 ॥ |
கிருஷ்ணா ! பேராசையால் விவேகம் இழந்த மனத்தினராகிய இவர்கள் குல நாசத்தால் உண்டாகும் தீங்கையும், நண்பர்களை வஞ்சிப்பதால் விளைகின்ற பாதகத்தையும் தெரிந்துகொள்ளவில்லை. அதனை தெளிவாக அறிந்து இருக்கின்ற நாம் ஏன் அந்த பாவத்திலிருந்து காத்துகொள்ள கூடாது.
குலக்ஷயே ப்ரணஷ்யந்தி குலதர்மா: ஸநாதநா:। தர்மே நஷ்டே குலம் க்ருத்ஸ்நமதர்மோ அபிபவத்யுத॥ 1.40 ॥ |
குலம் நாசமடையும் போது, காலங்காலமாக இருந்து வருகின்ற குல தர்மங்கள் அழிகின்றன. தர்மம் குன்றுவதால் குலம் முழுவதையும் அதர்மம் சூழ்கிறது.
அதர்மாபிபவாத்க்ருஷ்ண ப்ரதுஷ்யந்தி
குலஸ்த்ரிய:। ஸ்த்ரீஷு துஷ்டாஸு வார்ஷ்ணேய ஜாயதே வர்ணஸங்கர:॥ 1.41 ॥ |
விருஷ்ணி குலத்தில் உதித்தவனே கிருஷ்ணா ! அதர்மம் மிகுவால் குலமகளிர் கற்பை இழப்பார்கள். பெண்கள் கற்பை இழப்பதால் ஜாதி கலப்பு உண்டாகிறது.
ஸங்கரோ நரகாயைவ குலக்நாநாம் குலஸ்ய ச। பதந்தி பிதரோ ஹ்யேஷாம் லுப்தபிண்டோதகக்ரியா:॥ 1.42 ॥ |
ஜாதி கலப்பினால், குலத்தை அழித்தவர்களுக்கும் குலதினருக்கும் நரகமே கிடைக்கிறது. அவர்களுடைய முன்னோர்கள் சாதம் மற்றும் தண்ணீரால் செய்யபடுகின்ற கிரியைகளை இழந்து விடுவார்கள்.