தோஷைரேதை: குலக்நாநாம் வர்ணஸங்கரகாரகை:। உத்ஸாத்யந்தே ஜாதிதர்மா: குலதர்மாஷ்ச ஷாஷ்வதா:॥ 1.43 ॥ |
குலத்தை அழித்தவர்களின் தீமைகளால் ஜாதிகலப்பு ஏற்படுகிறது. அதன் காரணமாக காலங்காலமாக இருந்து வருகின்ற ஜாதி தர்மங்களும் குல தர்மங்களும் அழிகின்றன.
உத்ஸந்நகுலதர்மாணாம் மநுஷ்யாணாம் ஜநார்தந। நரகே நியதம் வாஸோ பவதீத்யநுஷுஷ்ரும॥ 1.44 ॥ |
கிருஷ்ணா ! குல தர்மங்களை இழந்தவர்கள் நரகத்தில் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று கேள்விபட்டு இருக்கிறேன்.
அஹோ பத மஹத்பாபம் கர்தும் வ்யவஸிதா வயம்। யத்ராஜ்யஸுகலோபேந ஹந்தும் ஸ்வஜநமுத்யதா:॥ 1.45 ॥ |
அரசு போகத்தை அனுபவிப்பதற்கான ஆசையால் உறவினரை கொல்லவும் முன் வந்தோம் நாம். இந்த மகாபாவத்தை செய்வதற்கு துணிந்தோமே !
யதி மாமப்ரதீகாரமஷஸ்த்ரம் ஷஸ்த்ரபாணய:। தார்தராஷ்ட்ரா ரணே ஹந்யுஸ்தந்மே க்ஷேமதரம் பவேத்॥ 1.46 ॥ |
எதிர்க்காமலும் ஆயுதமில்லாமலும் இருக்கின்ற என்னை கையில் ஆயுதமுடைய துரியோதனன் முதலானோர் போரில் கொல்வார்களேயானால் கூட அது எனக்கு மிகுந்த நன்மை செய்வதே ஆகும்.